நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? |
மலையாளத்தில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. கடந்த மாதம் அவர் நடிப்பில் வெளியான என்ன தான் கேஸ் கொடு என்கிற படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடிக்கு மேல் வசூலித்து குஞ்சாக்கோ போபன் மார்க்கெட் வேல்யூவை உயர்த்தியுள்ளது. சமீபத்தில் அரவிந்த்சாமி உடன் இணைந்து நடித்த ரெண்டகம் திரைப்படம் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் தற்போது டினு பாப்பச்சன் என்பவர் டைரக்ஷனில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் குஞ்சாக்கோ போபன். இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது இவருக்கு வலது கையில் அடிபட்டது. இதனை தொடர்ந்து தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கும் குஞ்சாக்கோ போபன், கையில் கட்டுப்போட்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டு, மிகப்பெரிய ஆக்ஷன் கேரக்டர் ஒன்று செய்தபோது அதற்கு கிடைத்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.