ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் முதன்முறையாக ஹிந்தியில் இயக்கி உள்ள படம் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார். அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க, பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குத்துச்சண்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் மைக் டைசனும் விஜய்தேவரகொண்டாவும் மோதும் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெறுகின்றன. அவரும் ஆக-25 ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் விஜய் தேவரகொண்டா, மைக்டைசனுடன் நடித்தது குறித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “மைக் டைசனுடன் நடிக்கப்போகிறேன் என்று தெரிந்ததும் என்னை விட என்னுடைய அம்மா தான் ரொம்ப படபடப்பாக மாறிவிட்டார். சண்டைக்காட்சிகளின்போது தெரிந்தோ தெரியாமலோ என்னை மைக் டைசன் துன்புறுத்தி விடுவாரோ என்று பயந்தார். இதற்காக வீட்டில் சில பூஜைகள் கூட செய்தார். அதுமட்டுமன்றி படப்பிடிப்பு தளத்தில் உள்ள நிர்வாகிகளுடன் அவ்வப்போது தொலைபேசியில் பேசி படப்பிடிப்பு நிலவரம் குறித்து தெரிந்து கொண்ட பின்னர் தான் சற்று நிம்மதி ஆனார். மேலும் படக்குழுவினரில் முக்கியஸ்தர்கள் அனைவரிடமும் நீங்கள் தான் என் மகனுக்கு பொறுப்பு என்று உறுதி வாங்கிக் கொண்டார்கள்.
ஆனால் அவர் அவ்வளவு தூரம் பயப்படும் விதமாக மைக் டைசன் ஒன்றும் முரட்டுத்தனமான நபர் அல்ல.. பழகுவதற்கு ரொம்பவே இனிமையானவர். ஒரு சாதாரண மனிதனைப் போல தனது குடும்பத்தைப் பற்றியும் தனது சொந்த விஷயங்களைப் பற்றியும் என்னுடன் அவர் இயல்பாக பகிர்ந்து கொண்டார்” என்று கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.