சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஷ். சர்வதேச நிறுவனமாக புனி கணெக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகரியாக பணியாற்றியவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் மாடல் ஆனார். அதன்பிறகு சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். கடைசியாக பூரி ஜெகன்நாத் இயக்கிய மெஹபூபா படம் அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது.
அந்த படமே விஷ்சுக்கு விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தின் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஹீரோ ஒரு குத்துச் சண்டை வீரர் என்பதால் அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் அதைவிட பவர்புல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் பூரி ஜெகன்னாத் சொன்னதால் இரண்டு வருடங்கள் ஜிம்மிலேயே இருந்து கேரக்டருக்காக தன்னை மாற்றினார் விஷ். “இந்த இடத்தை பிடிக்க 12 வருடங்கள் போராட வேண்டியது இருந்தது. இப்போது எனது இலக்கை அடைந்திருக்கிறேன். லைகரில் எனக்கு பெரிய திருப்பத்தை தரும். அதன்பிறகு வில்லன், ஹீரோ என கலந்து நடிப்பேன்”. என்கிறார் ஷிவ். படம் வருகிற 25ம் தேதி வெளிவருகிறது.