ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
மோகன்லால் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக வெளியாகி வரும் படங்களை கவனித்து பார்த்தால் தியேட்டர்கள் மற்றும் ஓடிடி தளம் இரண்டையுமே அவர் சரியாக பேலன்ஸ் பண்ணி படங்களை வெளியிட்டு வருவது நன்றாக புரியும். கொரோனா காலகட்டத்தில் திரிஷ்யம் 2 மற்றும் புரோ டாடி ஆகிய படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டார் மோகன்லால். அதேசமயம் அவர் நடித்த வரலாற்று படமான மரைக்கார்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆராட்டு திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகி தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு வெளியான டுவல்த் மேன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த கணக்குப்படி அடுத்து வெளியாக இருக்கும் அவரது படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல மோகன்லால் நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தியேட்டர்களில் தான் ரிலீசாகிறது என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் வைசாக்கும் அந்தப்படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவும் மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றி உள்ளதால் மான்ஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் இந்த படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகலாம்.