இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
தெலுங்கில் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், ராம்சரண் ஆகிய நான்கு ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாக இருப்பதாக டோலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் பெயரிடப்படாத தனது பதினைந்தாவது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். ஐஏஎஸ் அதிகாரியாக அவர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு.
அதேபோல், த்ரீ விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தையும் அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜாஹெக்டே நடிக்கிறார். அதேபோல் கொரட்டல்ல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அவரது 30வது படமும் செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகிறது. அதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ்- ஸ்ருதிஹாசன் நடித்து வரும் சலார் படத்தையும் கேஜிஎப் படத்தை போலவே இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளார் பிரசாந்த் நீல். அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பை ஜனவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் முடித்து இப்படத்தின் முதல் பாகத்தை 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்கள். அதையடுத்து சலார் படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்க உள்ளது.