''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வில் மலையாள நடிகர் திலீப்பும் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூன்று மாத சிறை தண்டனை பெற்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். நான்கு வருடங்கள் கடந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில் திலீப்பின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை திசைதிருப்பும் விதமாக சட்ட மற்றும் தார்மீக விதிகளுக்கு புறம்பாக முறையற்ற வகையில் நடந்துகொள்வதாக, பாதிக்கப்பட்ட நடிகை குற்றம் சாட்டியுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேரள பார் கவுன்சிலில் முறையிட்டுள்ளார்.
இந்த புகாரில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ள நடிகை, அவர்கள் அதுபோன்று நடந்துகொண்ட பல தருணங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளாராம்.. குறிப்பாக தங்களது விதி மீறிய நடவடிக்கைகளால் தனது தரப்பு சாட்சிகளான இருபது பேரை கட்டாயப்படுத்தி பிறழ் சாட்சிகளாக மாற்றிவிட்டனர் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
இவர்களது செயல் அதிர்ச்சி தருவதாகவும் மன்னிக்க முடியாததாகவும் இருப்பதாகவும் கூறியுள்ள நடிகை, கேரள பார் கவுன்சில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடுநிலையான உண்மையான விசாரணை நடத்தி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளாராம்.