'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
பழம்பெரும் மலையாள குணசித்ர நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார். 77 வயதான அவர் கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொல்லம் அருகில் உள்ள கேரளாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்பத்தினர் அவரை கவனித்து வந்தனர். என்றாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கைனகரி தங்ராஜ் புகழ்பெற்ற மலையாள நாடக கலைஞரான கிருஷ்ணன்குட்டி பாகவதரின் மகன். தந்தை வழியில் 100க்கும் மேற்பட்ட தலைப்பில் 10 ஆயிரம் முறை மேடை ஏறி நடித்தவர்.1978ம் ஆண்டு பிரேம் நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். கடைசியாக மம்முட்டி நடித்து வரும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் தமிழ் படம். இதுவே கடைசி படமாகவும் ஆனது.