Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சூப்பர் நேச்சுரல் கதையாக உருவாகியுள்ள நிவின்பாலியின் மகாவீர்யர்

04 ஏப், 2022 - 18:32 IST
எழுத்தின் அளவு:
Nivin-pauly-next-movie-Mahaveeryar

மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார். அதன்பிறகு அவர் இயக்கிய இரண்டு படங்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இந்தநிலையில் தனக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்து, தனது கேரியர் உயர காரணமான அப்ரிட் ஷைனுக்கு, தான் நடிக்கும் மகாவீர்யர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் நிவின்பாலி. மேலும் இந்தப்படத்தை நிவின்பாலியே தயாரித்தும் உள்ளார்.

இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தாடியும் ஜடாமுடியுமாக காட்சி தருகிறார் நிவின்பாலி. தெலுங்கில் வெளியான மகதீரா, ஷியாம் சிங்கா ராய் படங்களை போல வரலாற்று காலகட்டத்தில் நிகழ்ந்த கதையானது நிகழ்காலத்திலும் தொடர்வது போப்ன்று சூப்பர் நேச்சுரல் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மெம்மரி லாஸ் நோயால் அவதிப்படும் சிறுமியை மருத்துவமனையில் சந்தித்த மம்முட்டிமெம்மரி லாஸ் நோயால் அவதிப்படும் ... பழம்பெரும் மலையாள நடிகர் கைனகரி தங்கராஜ் காலமானார் பழம்பெரும் மலையாள நடிகர் கைனகரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05 ஏப், 2022 - 09:19 Report Abuse
NicoleThomson இதை நீங்கதான் மெச்சுகிட்டு வெளியிடனும் மலையாள கரையோரம் மதவாதம் இல்லாத திரைப்படம் இருக்கா? இரு வெளிநாட்டு மதங்களும் ஆக்கிரமித்த மலையாளம் அதன் ஒரிஜினல் தன்மையை இழந்து பல நாட்கள் ஆகி விட்டது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in