மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
நடிப்பு, டைரக்ஷன் என பிஸியாக இருக்கும் நடிகர் பிரித்விராஜ் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு 'காளியன்' என்கிற படத்தில் நடிக்க போவதாக தானே முன்வந்து பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பை வெளியிட்டார். 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரன் 'குஞ்சிரக்கோட்டு காளி' என்கிற கேரக்டரில் தான் பிரித்விராஜ் நடிக்கிறார்.
தற்போது கொல்லம் பகுதியாக இருக்கின்ற, 1700ஆம் வருடங்களில் வேநாடாக இருந்த பகுதியின் தன்னிகரில்லா தளபதியாக விளங்கிய இரவிக்குட்டி பிள்ளை பற்றிய வரலாறு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. “ஆனால், அவரது விசுவாசமான போர்வீரனான குஞ்சிரக்கோட்டு காளி பற்றிய வீர வரலாறு பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. அவனது வீரம், தியாகம், நாட்டுப்பற்று ஆகியவற்றை பறைசாற்றும் இந்த கதையில் நான் காளியாக நடிக்கிறேன்” என அப்போது பெருமிதத்துடன் பிரித்விராஜ் கூறியிருந்தார். அறிமுக இயக்குனர் மகேஷ் என்பவர் இந்தப் படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் ஆகியும் இப்போதுவரை அந்தப்பட்டம் துவங்கப்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை.. அதனால் அந்தப்படம் கைவிடப்பட்டதாகவே திரையுலகில் பலரும் கூற ஆரம்பித்தார்கள். இந்தநிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜீவ் கோவிந்தன் சமீபத்தில் பிரித்விராஜுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு காளியன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது என்று அறிவித்துள்ளார். பிரித்விராஜ் படங்களிலேயே இந்த படம் அதிக பொருட்செலவில் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.