'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு ஸ்டார்கள் அனைவருமே தற்போது பான் இண்டியா ஸ்டார்களாக உருவாகி வருகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் ரவிதேஜா. இவரின் முதல் பான் இண்டியா படமான டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் தொடக்க விழா நாளை (ஏப் 2) நடக்கிறது.
இதனை முன்னணி இயக்குநர் வம்சி இயக்குகிறார். 'தி காஷ்மீர் பைல்ஸ்' என்ற படத்தை தயாரித்த அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். இதன் தொடக்க மாதப்பூரில் உள்ள ஹெச் ஐ சி சி வளபாகத்தில் நடைபெறுகிறது.
1970களில் தென்னிந்தியா முழுமைக்கும் நன்கு அறியப்பட்ட துணிச்சல்மிக்க திருடன் டைகர் நாகேஸ்வரராவ். இவன் வசித்த ஸ்டூவர்ட்புரம் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டடுள்ள படம். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் உருவாகிறது. ஆர் மதி ஒளிப்பதிவு செய்ய, ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.