ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
மலையாள திரையுலகை பொருத்தவரை கொரோனா தாக்கம் ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இப்போது வரை அதிக படங்களில் நடிப்பதும், அதிக படங்களை ரிலீஸ் செய்வதும் என பார்த்தால் நடிகர்கள் மோகன்லாலும் பிரித்விராஜும் தான்.. சூழ்நிலைக்கேற்றவாறு ஓடிடி மற்றும் தியேட்டர் என மாறிமாறி தனது படங்களை ரிலீஸ் செய்து வருகிறார் பிரித்விராஜ். அந்தவகையில் தற்போது அவர் நடித்துள்ள ஜனகனமன என்கிற படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
டிரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு பிரித்திவிராஜூடன் இணைந்து நடித்துள்ளார்.. கத்னய்கிகளாக மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி கொடுத்து வரும் பிரித்விராஜ், இந்த படத்திற்கு நிச்சயமாக இரண்டாம் பாகம் உண்டு என்றும் கூறி வருகிறார்