ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
மலையாளத்தில் புதுப்புது கதாநாயகிகள் வந்தாலும் கூட தற்போதும் அவர்களுக்கு போட்டியாக களத்தில் நின்று முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை மஞ்சுவாரியர்.. மேலும் அவரை பொருத்தவரை பெரிய அளவில் ஆடம்பரங்களை விரும்பமாட்டார்.. விழாக்களுக்கு கூட எளிமையாகவே வந்து செல்வதுதான் அவரது வழக்கம்.. இந்தநிலையில் மஞ்சுவாரியர் மினி கூப்பர் எலக்ட்ரிக் கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளார்.. இதன் மதிப்பு 48 லட்சம் ரூபாய். அதேசமயம் இந்த காரை அவர் வாங்கியதன் பின்னணியில் வேறு ஒரு சுவாரஸ்ய கதை உள்ளதாக சொல்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மஞ்சுவாரியர் நடித்த லலிதம் சுந்தரம் என்கிற படம் வெளியானது. இந்த படத்தை மஞ்சு வாரியரின் தம்பி மது வாரியர் இயக்கியிருந்தார். மஞ்சு வாரியரே இந்த படத்தை சொந்தமாக தயாரித்து இருந்தார். இந்தப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல லாபமும் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதை கொண்டாடும் விதமாகவே அவர் இந்த புதிய காரை வாங்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.