ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க போகும் தனுஷ் | புஷ்பா 2 படத்தில் பஹத் பாசிலுக்கு கூடுதல் முக்கியத்துவம் | கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் செய்யும் மாற்றம் | நடிகர் சாருஹாசனுக்கு அறுவை சிகிச்சை : சுஹாசினி தகவல் | மகளின் பெயரை அறிவித்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | அமரன் படத்தை பாராட்டிய ரஜினி | மிஸ்டர் மனைவி சீரியலை விட்டு விலகிய ஸ்மிருதி | நான் உங்கள் ராஜியாக தொடர்வேன் - ஷாலினி விளக்கம். | இந்திய சினிமாவுக்கு 2024 சிறப்பான தீபாவளியா? | இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிவி பிரகாஷ்குமார் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மலையாளம் என பிசியாக இருந்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் மூன்று மாத காலம் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக திலீப் மீது மீண்டும் வேறு ஒரு வழக்கு பதியப்பட்டு அதிலும் திலீப்பிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர் திலீப் முதலில் தன் மீது பதியப்பட்ட நடிகை கடத்தல் வழக்கில் கிட்டத்தட்ட முழு விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது அடுத்தடுத்த விசாரணைகள் நடப்பது வழக்கை திசை திருப்புவதாக இருக்கிறது.. எனவே மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்.. அப்படி இல்லை என்றால் அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அந்த முதல் வழக்கில் மேற்கொண்டு புதிய சாட்சிகளிடம் விசாரணை செய்வதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ள நீதிமன்றம் அதே சமயம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் அந்த வழக்கு விசாரணை முழுவதையும் முடிக்க வேண்டுமென போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளது.