பொய்க்கால் குதிரை,Poikkal Kuthirai

பொய்க்கால் குதிரை - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மினி ஸ்டுடியோஸ்
இயக்கம் - சன்தோஷ் பி ஜெயக்குமார்
இசை - இமான்
நடிப்பு - பிரபுதேவா, வரலட்சுமி
வெளியான தேதி - 5 ஆகஸ்ட் 2022
நேரம் - 2 மணி நேரம் 2 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் சமீப காலமாக குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய படங்கள் அடிக்கடி வருகின்றன. அவை பெரும்பாலும் த்ரில்லர் படங்களாக இருக்கும். இந்தப் படமும் குழந்தைக் கடத்தலைப் பற்றிய ஒரு படம்தான். ஆனால் த்ரில்லர் படமாக மட்டும் அல்லாமல் சென்டிமென்ட் படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து சில ஆபாசப் படங்களை இயக்கிய சன்தோஷ் பி ஜெயக்குமார் தனது இமேஜை மாற்றிக் கொள்ள இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அப்பா, மகள் இடையிலான பாசம்தான் படத்தின் மையக்கரு. ஒரு கால் இல்லாத அப்பா, நோயால் பாதிக்கப்பட்ட சிறு வயது மகள் என பெண்களையும் கவரும் விதமாக படத்தை நகர்த்தியிருககிறார் இயக்குனர்.

ஒரு விபத்தில் மனைவியையும், தனது இடது காலையும் இழந்தவர் பிரபுதேவா. தனது ஒரே மகள் பேபி ஆழியாவுடன் வசித்து வருகிறார். மகள் ஆழியாவுக்கு உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் வர சிகிச்சைக்காக பணத்திற்குத் திண்டாடுகிறார் பிரபுதேவா. அதனால், பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வரலட்சுமியின் மகளைக் கடத்தத் திட்டமிடுகிறார். ஆனால், வேறு யாரோ வரலட்சுமியின் மகளைக் கடத்தி விடுகிறார்கள். வரலட்சுமியிடம் சிக்கும் பிரபுதேவா, அவரே கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடித்துத் தருகிறேன் என களத்தில் இறங்குகிறார். அவர் கடத்தப்பட்ட குழந்தையைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு கால் இல்லாத அப்பா கதாபாத்திரத்தில் பிரபுதேவா. தன் மகள் மீது அளவுக்கதிகமான பாசம் வைத்திருப்பவர். தன் மகள் உயிருக்காக மற்றொரு மகளைக் கடத்த முடிவெடுப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது. கிராபிக்ஸ் உதவியுடன் அந்த ஒற்றைக் காலுடன் நடனமாடுகிறார், அதிரடியாக சண்டை போடுகிறார். இந்தக் கதாபாத்திரத்தை எதற்காக ஒரு கால் இல்லாமல் உருவாக்க வேண்டும் என்று தெரியவில்லை. அவர் மீது பரிதாபம் வருவதற்காக இப்படி வைத்திருக்கலாம். ஆனால், தன் மகளுக்காக வேறொருவர் மகளைக் கடத்துபவர் மீது எப்படி பரிதாபம் வரும் என இயக்குனர் யோசிக்கவில்லை போலிருக்கிறது.

மிகப் பெரும் தொழிலதிபரின் மகளாக வரலட்சுமி. அப்பாவின் மறைவுக்குப் பின் அவரே கம்பெனியை நிர்வகிக்க ஆரம்பிக்கிறார். அவர் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் எல்லாம் இல்லை. பாசமான ஒரு அம்மாவாக மட்டுமே தெரிகிறார். ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார் பிரகாஷ் ராஜ்.

பிரபுதேவாவின் மகளாக பேபி ஆழியா, நண்பனாக ஜெகன், வரலட்சுமியின் கணவராக ஜான் கொக்கேன் ஆகியோரும் சில காட்சிகளில் வந்து போகிறார்கள்.

இமான் இசையில் பாடல்கள் ஏமாற்றம். பின்னணி இசையில் பரவாயில்லை ரகம்தான்.

இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் பல திருப்பங்களை வைத்திருக்கிறார் இயக்குனர். யார் கடத்தியிருப்பார்கள் என்பதில் இருக்கும் சில திருப்பங்கள் நாம் எதிர்பார்க்காத ஒன்று. ஆனாலும், ஒரு முழு திருப்தி படம் பார்க்கும் போது கிடைக்கவில்லை என்பது உண்மை.

பொய்க்கால் குதிரை - தடுமாற்றம்

 

பொய்க்கால் குதிரை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பொய்க்கால் குதிரை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படுவர் பிரபுதேவா. டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, கர்நாடக மாநிலம், மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். தந்தையை போலவே பிரபுதேவாவும் நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு சின்ன வயதில் இருந்தே முறைப்படி நடனம் கற்றார்.

பரதநாட்டியம், வெஸ்டர்ன் என அனைத்து வித நடனங்களையும் ஆடும் ஆற்றல் பெற்ற பிரபுதேவா, சினிமாவில் ஒரு டான்ஸராகத்தான் அறிமுகமானார். ஆரம்பத்தில் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பின்னர் ஓரிரு பாடல்களில் நடனமாடினார். பின்னர் இந்து என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, தொடர்ந்து காதலன், மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் நடித்தபடியே இயக்குநராகவும் களமிறங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

100க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ள பிரபுதேவா, சிறந்த நடன அமைப்புக்காக இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

தான் காதலித்த ரமலத் என்ற பெண்ணையே திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு அப்பாவும் ஆனார். இதில் அவரது ஒரு மகன் கேன்சர் நோயால் இறந்து போனார். மகனின் மரணம் பிரபுதேவாவை பெரிதும் வாட்டியது.

இந்த சூழலில் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கி, தான் காதலித்து மணந்த முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்தும் செய்தார். பின்னாளில் நயன்தாராவுடனான காதலும் முறிவுக்கு வந்தது.

மேலும் விமர்சனம் ↓