குட் டே,Good Day
Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : நியூ மாங்க் பிக்சர்ஸ்
இயக்கம் : என். அரவிந்தன், பிருத்விராஜ் ராமலிங்கம்
நடிகர்கள் : பிருத்விராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் முருகன், ஜீவா சுப்பிரமணியம்
வெளியான தேதி : 27.06.2025
நேரம் : 2 மணி நேரம் 13 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

கதைக்களம்
திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வரும் பிருத்விராஜ் ராமலிங்கம், அங்கு மேனேஜரை முறைத்துக் கொள்கிறார். இதனால் அந்த மேனேஜர், முதலாளியுடன் சேர்ந்து கொண்டு பிருத்விராஜை அவமானப்படுத்தி பழி வாங்குகிறார். மன வேதனையுடன் வீட்டுக்கு திரும்பும் அவர் அன்று இரவு குடித்துவிட்டு அளவுக்கு மீறிய போதையில் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளர் முதல் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் அலப்பறை செய்கிறார். இதனால் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் பிருத்விராஜ் அங்கும் ஒரு சம்பவத்தை செய்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன என்பதே இந்த படத்தின் மீதி கதை.

96, மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம் குமாரிடம் இணை இயக்குனர்களாக பணியாற்றிய பிருத்விராஜ் ராமலிங்கம் மற்றும் அரவிந்தன் இருவரும் இணைந்து இந்த படத்தை கொடுத்துள்ளனர். படத்தை பிருத்விராஜ் ராமலிங்கம் தயாரிப்பதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா சொன்ன விஷயத்தில் இன்ஸ்பயர் ஆகி இந்த கதையை அரவிந்தன் இயக்கியுள்ளார்.

ஒவ்வொருவரும் காலையில் வேலைக்கு செல்லும் போது இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டும் என எண்ணிக் கொண்டுதான் செல்வோம். ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு அன்றைய நாள் குட் டே வாக அமையாமல் பேட் டேவாக அமைகிறது. அதன் பின்னனி மற்றும் சுவாரசியத்தை ஒரு நாள் இரவில் நடக்கும் கதையாக இயக்குனர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

படம் தொடங்கி கதை ஜாலியாக நகர்கிறது. அடுத்த அரை மணி நேரத்திலேயே பிரச்சனை இதுதான் என புரிந்து விடுகிறது. அதன் பிறகு கதையை நகர்த்த படாதபாடு பட்டுள்ளார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் கதை நகராமல் அதே இடத்திலேயே நிற்கிறது. கிளைமாக்ஸில் திடீரென குழந்தை நரபலி பற்றி சொல்லி நியாயம் சேர்க்க நினைத்துள்ளார்கள்.

கதையின் நாயகனாக நடித்துள்ள பிரித்விராஜ் ராமலிங்கத்தின் இயல்பான முகம் அந்த கேரக்டருடன் ஒன்றி விடுகிறது. குடித்துவிட்டு இப்படி எல்லாம் செய்வார்களா என ஆச்சரியப்பட வைக்கும் வகையில் அவர் நடித்துள்ளார். இவர் தான் கதையின் பிரதான கேரக்டராக இருக்கிறார். இவரை சுற்றி கதை நகர்வதால் மற்றவர்களுக்கு பெரிதாக காட்சிகள் கொடுக்கப்படவில்லை. காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், மைனா நந்தினி, போஸ் வெங்கட் விஜய் முருகன் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.

மதன் குணதேவ் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. இரவிலும் பகல் போல் படத்தை காட்டியிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் நன்று.

பிளஸ் & மைனஸ்
இரவில் குடித்துவிட்டு ஒருவர் செய்யும் அலப்பறைகளை ஒரு ஜாலியான கதையாக சொல்லி உள்ளார்கள். இருப்பினும் அதை திரைக்கதையாக மாற்றுவதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். திரைக்கதை ஓட்டத்திற்கு தீனி போட முடியாமல் பல இடங்களில் படம் லாக் ஆகி நிற்கிறது. அதிக அளவிலான மதுபான காட்சிகள் படம் பார்ப்போருக்கு போதையை தருகிறது.

குட் டே - படம் பார்ப்போருக்குமா!!

 

குட் டே தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

குட் டே

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓