பிருந்தாவனம்,Brindavanam
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

"மொழி", "அழகிய தீயே", "அபியும் நானும்" போன்ற தரமான தமிழ் படங்களின் இயக்குனர் ராதாமோகனின் எழுத்து, இயக்கத்தில், "வான்சன் மூவிஸ் "ஷான் சுதர்ஸன் தயாரிக்க, அருள்நிதி, விவேக், தன்யா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், செல் முருகன், டவுட்டு செந்தில் உள்ளிட்டோர் நடிக்க, வந்திருக்கும் படமே "பிருந்தாவனம்".

சின்ன வயதிலேயே விபத்தொன்றில் தன் காது கேட்கும் திறனையும், வாய் பேசும் திறனையும், கூடவே தனது பெற்றோரையும் இழந்து அனாதையான சிறுவன், வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனது அபிமான காமெடி நடிகரை எதிர்பாராமல் அவன் சந்தித்து, தக்க தருணத்தில் சில உதவிகள் நடிகருக்கு இவன் செய்ய, அதற்கு கைமாறாக அந்த நடிகர் தன் ரசிகனை விரும்பும் பெண்ணோடு அவனை தடை பல கடந்து, களைந்து, சேர்த்து வைப்பதோடு, அவன் இல்லற வாழ்க்கை, இனிதே வளமாவதற்கும் வங்கி ஒன்றின் வாயிலாக உதவுவதும் தான் "பிருந்தாவனம்" படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல்.... எல்லாம்.

இப்படி ஒரு கதையில் நிறைய காமெடி, கொஞ்சம் லவ், கொஞ்சம் சோகம், கொஞ்சம் சென்டிமென்ட்... எல்லாம் கலந்து படத்தை ஜனரஞ்சமாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். அதற்காக அவரை பாராட்டலாம்!

சின்ன வயதிலேயே கேட்கும், பேசும் திறனை இழந்த கண்ணனாக, கதாநாயகராக அருள்நிதி கச்சிதம். வளர்ந்து பெரிய ஆள் ஆகி, முடி திருத்தும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் அவர், விவேக்கின் காமெடி, ரசிகராக மேலும் கச்சிதம். சைகையாலேயே அவர் பெரும்பாலான படம் முழுக்க பேசும் பாஷைகள் அவரை கைதேர்ந்த நடிகராக காட்டியிருக்கிறது சபாஷ்!

அருள்நிதியின் அபிமான காமெடி நடிகராக விவேக், செம காமெடி. என் கூட, "6 அடி ரூபத்துல ஒரு ஏழரை..." என அருள்நிதியை கிண்டல் செய்வதில் தொடங்கி, "சினிமாவுல மூட நம்பிக்கைக்கு எதிரா குரல் கொடுக்கிறேன். நிஜத்துல மரம் நடக்குரல் கொடுக்கிறேன்.... ஆனா, உன் செல்லிலே இதோ, உனக்கு டப்ஸ் மாஸ் வாய்ஸ் கொடுத்திருக்கேன்... பார்த்தியா... அதில் தான் பூரண சந்தோஷம் எனபூரிப்பது வரை... தன் பாத்திரத்தின் வாயிலாக படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அருளை, அவரது சலூன் அருகே இருக்கும் ஷாப்பிங் மாலின் முதலாளி மகளான நாயகி, தன்யா ரவிச்சந்திரன் ஒன் சைடாக காதலித்து வருகிறார். எதையும் முகத்திற்கு நேராக பேசும் சந்தியாவாக தன்யா ரவிச்சந்திரன், அறிமுகம் என்பது தெரியாத அளவிற்கு அழகாய் நடித்திருக்கிறார். அம்மணி காதலிக்க நேரமில்லை மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாச்சே சும்மாவா.?!

பிள்ளையை தொலைத்து விட்டு, தெருவில் திரியும் அநாதை பிள்ளைகளை ஹோமில் சேர்த்து விடும் எம்.எஸ்.பாஸ்கர், சோகமே உருவாக உருக்கியிருக்கிறார்.

தன்யாவின் அப்பாவாக தலைவாசல் விஜய், சரியான தேர்வு. விவேக்கின் உடம்பு முடியா நண்பர் சுப்பு பஞ்சு, சினிமா புரடக்ஷன் மேனேஜர் மணியாக செல் முருகன், அருள்நிதியின் சலூன் நண்பராக வரும் டவுட்டு செந்தில் ஆகிய அனைவரும் கூட சரியான தேர்வு. சபாஷ் சொல்லும் நடிப்பு என கலக்கியுள்ளனர்.

"அப்பாவோட கோவை பிரண்டு கணபதி அங்கிள் - சன் உன்னை பெண் பார்க்க வருகிறார்..." என்று தன் தாய் கூறியதும் நாயகி, "யாரு, வடிவேலுக்கு பேக்கரி எழுதிக் கொடுத்தாரே அந்த கணபதி அங்கிள் சன்னா..?" என்பது உள்ளிட்ட படம் முழுக்க தெறிக்கும் பொன் பார்த்திபனின் யதார்த்த நகைச்சுவை காமெடி பன்ச்கள், மற்றும், சோக வசனங்கள் இப்படத்தின் பெரும் பலங்கள் எனலாம்.

ஊட்டியின் இயற்கை அழகை அப்படியே சுருட்டி வந்திருக்கும் எம்.எஸ்.விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு, ஒவியப்பதிவு.

விஷால் சந்திரசேகரின் இசையில்"ரூபிரூபி ரூபா...", "கிச்சு கிச்சு சாரே...." ஆகிய பாடல்கள் ஓ.கே .அதே நேரம் பின்னணி இசையில் இன்னும் சற்று பிடிப்பு இருந்திருக்கலாம்.

மொழி", "அழகிய தீயே", "அபியும் நானும்" உள்ளிட்ட தரமான படங்களைத் தந்த இயக்குனர் ராதாமோகனின் எழுத்து, இயக்கத்தில் ஒரு சில லாஜிக் குறைகள், மேஜிக் சீன்கள் குறையாய் தெரியாது இருந்தாலும் கதையும் காட்சிகளும், மிகவும் மெதுவாய் நகர்வதும், நாயகர்பேர் பாதி படம் வாய் பேசும், காது கேட்கும் திறன் இல்லாதவராக இருப்பதும் சற்றே பலவீனம். அதேநேரம் படம் முழுக்க, பரவி விரவிக் கிடக்கும் டைமிங் காமெடிகளுக்காக பிருந்தாவனத்தை ஒரு முறையாவது பார்க்கலாம், ரசிக்கலாம்.

ஆக மொத்தத்தில், இயக்குநர் ராதாமோகன் பழைய பார்மில் இல்லை போலும்... அவ்வாறு இருந்திருந்தார் என்றால் "பிருந்தாவனம் இன்னும் பிரமாதமாக பூத்து குலுங்கியிருக்கும்!"

 

பட குழுவினர்

பிருந்தாவனம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓