Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

உப்பு கருவாடு

உப்பு கருவாடு,Uppu karuvadu
  • உப்பு கருவாடு
  • கருணாகரன்
  • நந்திதா
  • இயக்குனர்: ராதாமோகன்
27 நவ, 2015 - 17:38 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » உப்பு கருவாடு

தினமலர் விமர்சனம்


மொழி, அபியும் நானும் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகனின் அடுத்த படைப்பாக அட்டக்கத்தி நந்திதா கதையின் நாயகியாக நடிக்க, பஸ்ட் காப்பி பிக்சர்ஸ் ராம்ஜீ நரசிம்மன் தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது... உப்பு கருவாடு திரைப்படம்!


உப்புகருவாடு கதைப்படி.., முதல் படம் பிளாப், இரண்டாவது படம் டிராப்... எனும் சூழலில் மூன்றாவது படம் இயக்க தயாரிப்பாளர் தேடி வரும் ஒரு பிரபலமில்லாத சினிமா இயக்குனர் கருணாகரன். அவருக்கு மேனேஜர் மயில்சாமி மூலம் அறிமுகமாகிறார் மீன் ஏற்றுமதி பிஸினஸில் கொடிகட்டி பறக்கும் சென்னை காசிமேட்டு தொழில் அதிபர் எம்.எஸ்.பாஸ்கர்.


ஐயா எனும் அடாவடிப் பேர்வழி பந்தாவுடன் அந்த ஏரியாவில் கொடி கட்டிப் பறக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கரின் ஆசை மனைவி சிந்துவின் விருப்பப்படி அவர்களது செல்ல மகள் நந்திதாவை நடிகையாக்க வேண்டுமென்பது ஆசை! அதற்காக கருணாகரனிடம் கதையை கேட்டும் கேட்காமலும் ஒரு படம் எடுக்க களம் இறங்குகிறார். தன் உதவியாளர்களூடன் அதற்கான முயற்சிகளில் இறங்கும் கருணா, நடிப்பு வராத நந்திதாவை வைத்துக் கொண்டு சந்திக்கும் பிரச்சனைகளை காமெடியுடனும், கருத்தாழத்துடனும் சொல்லி இருக்கும் படம் தான் உப்புகருவாடு!


மகா எனும் மகாலட்சுமியாக நடிப்பு வராத நடிகையாக பூங்குழலி எனும் பாத்திரத்தில் நந்திதா நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் மகாவாக பாத்திரத்திற்காக அவர் பண்ணி வச்சுக்கிட்டு பண்ணும் கலாட்டாக்கள் சில இடங்களில் கொஞ்சமே கொஞ்சம் போர் அடிப்பதை இயக்குனர் தவிர்த்திருக்கலாம்!


கருணாகரன்., சந்திரன் எனும் பேட் லக் டைக்டராக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். நடிப்பு வராமல் நந்திதா பண்ணும் அலப்பறைகளைக் கண்டு அவரும், அவரது உதவியாளர்கள் சாம்ஸ், நாரயணன் உள்ளிட்டோருடன் ஐயாவின் ஆளாக வரும் மாஞ்சா - கர்ணாவின் ரியாக்ஷன்கள் இதுவரை எந்தப் படத் திலும் பார்த்திராத ஹாஸ்யம், சுவாரஸ்யம்!


சந்திரனின் தோழி உமாவாக வரும் ரஷிதா, எம்.எஸ்.பாஸ்கர், அவரது மனைவி சிந்து, மேனேஜர் மயில்சாமி, கருணாவின் உதவியாளர்கள் சாம்ஸ் நாராயணன், தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசி அப்பு வாங்கும் உதவி இயக்குனர் 'டவுட்' செந்தில், டூபாக்கூர் சாமியார் டாடி சரவணன்... எல்லோருக்கும் மேல் காதல் தோல்வியில் கழுத்தறுக்கும் வேலையை விட்ட குமாரவேல்... உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.


பொன்.பார்த்திபனின் வசனம், ஜெய்யின் படத்தொகுப்பு, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, ஸ்டீவ் வாட்ஸின் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்திற்கு பெரிய பலம்.


ராதாமோகனின் எழுத்து, இயக்கத்தில் சினிமாவிற்குள்ளேயே கினிமாவை சிறப்பாக சொல்லியமைக்காக ''உப்பு கருவாடு'' படத்தை ரசிகர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள் என நம்பலாம்!


உப்பு கருவாடு - நல் உரைப்பு!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in