விமர்சனம்
அ நிறம் | அளவு
ஐதராபாத்தில் வசிக்கும் பகத் பாசிலுக்கு 2 நாட்களில் 25 லட்ச பணத்தை புரட்டி, லோக்கல் எம்எல்ஏவிடம் கொடுக்க வேண்டிய கட்டாயம். பணம் கிடைக்காத சூழ்நிலையில் குழந்தை சாராவை கடத்துகிறார். அவர் வீட்டில் பணம் கேட்டு மிரட்ட பிளான் போடுகிறார். அந்த திட்டத்தை செயல்படுத்தும்போது சாரா ஒரு பேய் என்பது பகத் பாசிலுக்கு தெரியவருகிறது. ஆனால், விபத்தில் தான் இறந்துவிட்டது தெரியாமல், தனது சக்தி மூலமாக பகத் பிரச்னைகளை தீர்க்க உதவுகிறார் சாரா. மனம் மாறிய பகத், சாரா பெற்றோர்களுக்கு என்ன ஆனது?, அந்த விபத்தில் உயிர் பிழைத்தார்களா என தேடுகிறார். அவர்களை கண்டுபிடித்தாரா?, சாராவுக்கு தன்னை பற்றிய உண்மைகள் தெரிந்ததா?, போலீசில் சிக்கும் பகத் பாசிலுக்கு என்ன நடக்கிறது என்பது ‛டோன்ட் டிரபிள் தி டிரபிள் கதை. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழிலும் டப்பாகி வந்துள்ளது.
ஹீரோ தாண்டி பல படங்களில் வில்லனாக, தாதாவாக நடித்த பகத் பாசில், ஆளே மாறி கதை நாயனாக நடித்த குழந்தை படம் என்று கூட சொல்லலாம். படத்தின் முழு கதையும் சாரா என்ற அந்த குழந்தை பின்னணியில் நடக்கிறது. பணத் தேவைகளால் தத்தளிக்கும் பகத் பாசில் தேவதை உடையில் இருக்கும் சாராவை கடத்துவதில் இருந்து படம் விறுவிறுப்பாகிறது. சாரா ஒரு பேய் என தெரிய வர, இன்னும் சூடுபிடிக்கிறது. பேய் படம் என்றாலும் பயமுறுத்தல், பழிவாங்கல் இல்லாமல் குழந்தைகளுக்கும் பிடித்த மாதிரி கதையை கொண்டு போய் இருப்பது படத்தின் சிறப்பு.
ஊதாரியாக, லோக்கல் எம்எல்ஏவிடம் மாட்டிக்கொண்டு தவிப்பராக வருகிறார் பகத் பாசில். குழந்தை சாராவிடம் தான் ஒரு மேஜிக்மேன் என பொய் சொல்லி, அவர் திறமைளை தனக்கு பயன்படுத்துகிறார். அந்த இடங்களில் கதையில் கலகலப்பு. அதேசமயம், தன்னை பற்றிய உண்மைகளை சாராவிடம் சொல்லிவிட்டு, போலீசிம் சிக்கி அடிவாங்கும் இடங்களில் கலங்க வைக்கிறார். பகத் பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா சம்பந்தப்பட்ட காட்சிகள், இருவருக்குமான பாசம் பார்வையாளர்களை உருக வைக்கிறது. சில இடங்களில் கண் கலங்க வைக்கிறது. துறுதுறு பாடி லாங்குவேஜில் பகத் பாசில் நடிப்பும் நச்
குழந்தை திவ்யா கேரக்டரில் வரும் சாராவின் குழந்தைதனம், தனது சக்தியை பயன்படுத்தி பல விஷயங்களை செய்வது, அவ்வப்போது கோபப்படுவது ஆகியவை பெரியவர்களை மட்டுமல்ல, குழந்தைகளையும் கவரும். கியூட்டான ரியாக் ஷன், மென்மையான பேச்சு, பகத்துடனான அன்பு காட்சிகளில் சாரா கலக்கியிருக்கிறார். கிளைமாக்சில் அவரின் தவிப்பு, அவர் மறைவது மனதை விட்டு அகல வெகுகாலம் பிடிக்கும். குழந்தைகள் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த கதைக்கு சாரா சரியான தேர்வு. ஐதராபாத் வீதிகளை பிராட் கேமரா அழகாக காண்பிக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் காலபைரவா இசை திக்திக்.
இவர்களை தவிர, பகத் நண்பர், போலீஸ்காரர், வில்லனாக வரும் மகேஷ் மஞ்சுரேக்கர் ஆகியோரும் ஆங்காங்கே நல்ல நடிப்பை தருகிறார்கள். கதையில் ஹீரோயின் கிடையாது. பணம் கேட்டு மிரட்டுவது, அதை பெற தவிப்பது ஆகியவை நல்ல சீன்கள். வில்லன், ஹீரோ மோதலை சீரியஸ் ஆக சொல்லாமல் காமெடியாக காண்பித்து இருப்பது புத்திசாலிதனம். சில இடங்களில் போராடித்தாலும், அடுத்த சீன்கள் அதை சரி செய்கிறது.
எத்தனையோ பேய் படங்கள் பார்த்து இருந்தாலும், பேயை கடத்தும் திருடன் சம்பந்தப்பட்ட இந்த படமும், பகத், சாரா நடிப்பும் அட, பீல் குட் மூவி. பேய் படமாக இருந்தாலும் பயம் வரவில்லை. பாசத்தின் அருமை தெரிகிறது என சொல்லவைக்கிறது. சில இடங்களில் நம்மை அறியாமல் கண் கலங்க வைக்கிறது.
டோன்ட் டிரபிள் தி டிரபிள் - கண் கலங்க வைக்கும் பாசம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!