விமர்சனம்
அ நிறம் | அளவு
தான் வாதாடிய எல்லா வழக்கிலும் ஜெயிக்கும் வக்கீல் மிஷ்கின், தன்னிடம் ஜூனியராக இருந்த கீர்த்தி சுரேசிடம் ஒரு வழக்கில் தோற்கிறார். சில நாட்களில் கீர்த்தி சுரேஷ் கணவன் மீது ஒரு கொலை பழி விழுகிறது. அந்த வழக்கில் கணவனுக்காக கீர்த்தி சுரேசும், எதிர் தரப்பில் மிஷ்கினும் ஆஜர் ஆகிறார்கள். அந்த வழக்கில் ஜெயித்தது யார்? கொலையான பெண் யார்? அந்த கொலையை செய்ய காரணம் என்ன? அனைத்தையும் கீர்த்தி சுரேஷ் கண்டுபிடித்தாரா? இதுதான் சத்தியவான் சாவித்திரி படத்தின் கதை.
புராணகால சத்தியவான் சாவித்திரி நாடகத்துடன் படம் தொடங்குகிறது. அவ்வப்போது அந்த கதையின் தாக்கம் படத்தில் வருகிறது. அந்த புராண சாவித்திரிக்கும், இந்த பட கதை நாயகியாக, வக்கீலாக இருக்கும் சாவித்திரிக்கும் (கீர்த்திசுரேசுக்கும்) என்ன தொடர்பு. இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதையும் ஒருவித மறைமுகமாக குறியீடாக காண்பிக்கிறார் இயக்குனர். படம் முழுக்க கோர்ட் டிராமாதான். இடையில் கொஞ்சம் காதல், கள்ளக்காதல், கிரைம் இருக்கிறது.
திருமணம் வேண்டாம் என மறுக்கும் கீர்த்தி சுரேஷ் வேறு வழியில்லாமல் புதுமுக ஹீரோ சாருகேஷ் மனைவியாகி கோவையில் இருந்து சென்னை வருகிறார். மாமியார் வேலைக்கு போகக்கூடாது என சொன்ன நிலையிலும், மிஷ்கினிடம் ஜூனியராக சேர்ந்து தொழில் ரகசியங்கள் கற்கிறார். இடையில் கணவருடன் மோதல், அன்பு, கர்ப்பம் என கதை நகர்கிறது. ஒருகட்டத்தில் குரு மிஷ்கினுக்கு எதிராக கீர்த்தி வாதாட படம் பரபரப்பாகிறது. அடுத்த கட்டத்தில் கணவருக்காக போராட இன்னும் ஸ்பீடு. மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் கோர்ட் வாதங்கள், அதற்கான முன்னேற்பாடுகள், வழக்குகளின் பின்னணி, கிரைம் இதுதான் படத்தில் முக்கியமான விஷயம்
ஆரம்பத்தில் வழக்கமான குறும்புகார பெண்ணாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் திடீரென கோர்ட்டில் மிஷ்கினுக்கு எதிராக களம் இறங்கும் காட்சி அட போட வைக்கிறது. ஆரம்பத்தில் தடுமாறி கோர்ட்டில் அவர் வாதாடுவது கடைசியில் பல கேள்வி கேட்டு ஜெயிப்பது செம. கிளைமாக்சில் இன்னொரு முகத்துக்கு மாறுகிறார். அதில் இன்னும் கொஞ்சம் நடிப்பை கொட்டியிருக்கலாம். அது மிஸ்சிங். ஆனாலும் வக்கீல், மனைவி கேரக்டரில் கீர்த்தி நிறைவான நடிப்பை வழங்கி உள்ளார்.
மார்க்கண்டேயன் என வக்கீலாக வரும் இயக்குனர் மிஷ்கின் கம்பீரமாக இருக்கிறார். கோர்ட்டில் சிங்கம் மாதிரி கர்ஜிக்கிறார். அவர் வாதாட ஆரம்பித்தால் கோர்ட்டே அலறுகிறது. ஆனாலும், அவர் நடிப்பில் நிறைய செயற்கைதனம், முகத்தில் சில சேஷ்டைகள் எட்டி பார்க்கிறது. அதை குறைந்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருப்பார். அதேசமயம் அந்த அதிரடி வக்கீல் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார்.
அந்தகால படத்தில் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரியான கேரக்டர் அடிக்கடி வரும். அந்த மாதிரி வேடத்தில் வருகிறார் புதுமுக ஹீரோ சாருகேஷ். அவருக்கும், கீர்த்திக்குமான சில சீன்கள் ஓகே. ஆனாலும் இடைவேளைக்குபின் அவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை . கீர்த்தி சுரேஷ் நண்பனாக, மிஷ்கின் இன்னொரு ஜூனியராக வரும் பால சரவணன் கிடைத்த கே ப்பில் நாலைந்து டயலாக் போட்டு சிரிக்க வைக்கிறார். மற்றபடி அதே மாமியார், அதே அப்பா, அதே போலீஸ், வழக்கமான கேரக்டர், அதே சீன், அதே டயலாக்குகள் என படம் மந்தமாகிறது. ஒன்றிரண்டு சீன்களில் வந்தாலும் ஷில்பா மஞ்சுநாத் கேரக்டர் ஈர்க்கிறது.
சாம் சி.எஸ் இசை, பாடல்கள் ஓகே ரகம். கோர்ட்டில் அதிக காட்சிகள் நடக்கிறது. அதில் அருள்வின்சென்ட் கேமரா வொர்க் ஓகே.
படத்தின் பெரிய பிளஸ் கலகலக, பரபர, விறுவிறு கோர்ட் காட்சிகள்தான். முதற்பாதி இப்படி வேகமாக போகிறது. ஆனால், கணவன் சம்பந்தப்பட்ட வழக்கில் கீர்த்தி வாதாடுவதுதான் படத்தின் ஜீவன். அதில் ஏனோ அந்த அளவுக்கு அழுத்தம் இல்லை. முதல் வழக்கு மாதிரி, ஏனோ முக்கியமான அந்த இரண்டாவது வழக்கில் புத்திசாலிதனமான சீன் இல்லை. அதில் கவனம் செலுத்தியிருந்தால் படம் ஹிட்டாகி இருக்கும்.
பெண் கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள கதை என்பதால் மாறுபட்ட கிளைமாக்ஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். அதை இன்னும் அதிரடியாக சொல்லியிருந்தால் ரசிகர்கள் கொண்டாடி இருப்பார்கள். ஒரு கட்டத்தில் கோர்ட் வாதங்கள் ஓவர் டோஸ் ஆகிறது. சாவித்திரி நாடகமும், இந்த சாவித்திரி முடிவும் பார்வையாளர்களுக்கு எளிமையாக போய் சேரவில்லை. கீர்த்தி சுரேசை ரசிப்பவர்களுக்கு, கோர்ட் கதைகளை விரும்புகிறவர்களுக்கு கொஞ்சம் பிடிக்க வாய்ப்புள்ளது.
சத்தியவான் சாவித்திரி - நீதிமன்ற போராட்டம்

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…