சத்தியவான் சாவித்திரி, சிக்மா : வெளியீட்டு நிலை என்ன ?
ஜூலை 18, 2026
Advertisement
ஜூலை மாதத்தின் எஞ்சியுள்ள இரண்டு வாரங்களில் சில படங்களின் வெளியீட்டு அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்த "சத்தியவான் சாவித்திரி" படம் ஜூலை 24 அன்றும், விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் முறையாக இயக்கியுள்ள "சிக்மா" படம் ஜூலை 31 அன்றும் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜூலை 23ல் விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" வெளியாகும் என திடீரென அறிவித்தார்கள். இதனால், சில படங்களின் வெளியீடுகளை ஏற்கெனவே மாற்றி அறிவித்துள்ளார்கள்.
நேற்று வெளியாக வேண்டிய "அர்ஜூனன் பேர் பத்து, டார்க் ஹெவன்" ஆகிய படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஜிவி பிரகாஷ் நடித்துள்ள "இம்மார்டல்" படம் ஜூலை 23ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தைத் தற்போது செப்டம்பர் 4ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.
ஜூலை 24ல் அறிவிக்கப்பட்டிருந்த "சத்தியவான் சாவித்திரி" படம் வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை. நேற்று கூட தயாரிப்பு நிறுவனம் படத்தின் வெளியீட்டுத் தேதியுடன் புது போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். அவர்கள் போட்டியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை எனத் தெரிகிறது.
ஜூலை 31ல் அறிவிக்கப்பட்டிருந்த "சிக்மா" படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சமீபமாக எந்தவித அப்டேட்டையும் தரவில்லை. அப்படி அந்தப் படம் வருவதாக இருந்தால் இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வந்தாக வேண்டும்.
அடுத்த வெளியீடுகளில் ஜூலை 23ல் "ஜனநாயகன், ஜூலை 24ல் "சத்தியவான் சாவித்திரி", ஆகஸ்ட் 7ல் "ஜிடிஎன்", ஆகஸ்ட் 14ல் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்", ஆகஸ்ட் 28ல் "கராத்தே பாபு", செப்டம்பர் 4ல் "இம்மார்டல், மண்டாடி", செப்டம்பர் 10ல் "சர்தார் 2", செப்டம்பர் 11ல் "டிமாண்டி காலனி 3", அக்டோபர் 1ல் ‛மிஸ்டர் பாரத்", அக்டோபர் 15ல் ‛ஜெயிலர் 2" ஆகிய படங்கள் உறுதியாக வர உள்ளன.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!