அக்., 30ல் வெளியாகும் செய் செய்யாதே
அக் 23, 2026
Advertisement
மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் "செய் செய்யாதே" (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள படம் "செய் செய்யாதே". டாக்டர் எஸ்.ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம், மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில் அக்., 30ல் ரிலீஸாகிறது. தமிழகம் முழுக்க சுமார் 100 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!