விஜய் — புகைப்படங்கள், படங்கள், சுயவிவரம் | தினமலர் சினிமா
Advertisement
Advertisement
விஜய்
🎂22 Jun 1974· 52 years
12
🎬Films
47
📷Photos
52
🎂Age
பற்றி
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியரின் மகன் நடிகர் விஜய். 1974ம் ஆண்டு ஜூன் 22ம்தேதி பிறந்த இவரது இயற்பெயர் ஜோசப் விஜய். 1984ம் ஆண்டு டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், விஜயகாந்த் நாயகனாக நடித்த வெற்றி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்னர் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தைம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கினார். ஆரம்ப காலத்தில் தந்தையின் இயக்கத்தில் நடித்து வந்த விஜய் பின்னர் துறையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். விஜய்யின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்றும் இளைய சூப்பர்ஸ்டார் என்றம் பட்டப் பெயருடன் அழைக்கிறார்கள். பூவே உனக்காக, லவ் டூடே, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ், கில்லி, மதுர, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, தெறி, மெர்சல் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் விஜய் தனது படங்களில் இடம் பெறும் ஏராளமான பாடல்களையும் பாடியிருக்கிறார். சினிமாவை தாண்டி தவெக., என்ற அரசியல் கட்சியையும் துவங்கி இரண்டே ஆண்டுகளில் 2026ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வென்று தற்போது தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகிக்கிறார்.