விமர்சனம்
அ நிறம் | அளவு
ஆந்திர காடுகளில் வளரும் அரிய வகை செம்மரகட்டைகளை கடத்தும் கும்பலை பிடிக்க, ஐபிஎஸ் அதிகாரி சாய்பல்லவி தலைமையில் தனிப்படை அமைக்கிறது ஆந்திர அரசு. துபாயில் இருக்கும் நஸ்ரூதீன் ஷா, இன்னொரு நபர் தவிர, தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதி மம்முட்டிக்கும் இந்த கடத்தலில் பங்கு இருப்பது தெரிய வருகிறது. அவர் கைவசம் ஆயிரம் டன் கட்டைகள் இருக்க, அவர் மூலமாக அந்த நெட்வொர்க்கை பிடிக்க அவரிடம் போட்டோகிராபர் ஆக சேருகிறார் தனுஷ். அவர் சாய் பல்லவி டீமில் இருக்கும் போலீஸ்காரர். ஆயிரம் டன் கட்டைகளை ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறார் மம்முட்டி. அடுத்து என்ன நடக்கிறது. செம்மரக் கடத்தல் கும்பல் பிடிபட்டதா? தனுஷ் யார் என்பது மம்முட்டிக்கு தெரிந்ததா? இந்த ஆபரேசனில் என்ன நடக்கிறது என்பது ‛ஓம் படக்கதை.
சாதாரண போட்டோகிராபர், திருவண்ணாமலை குடும்பஸ்தன் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ்காரர், இடைவேளைக்கு பின் பாதிக்கப்பட்ட நபர் என மாறுபட்ட பரிணாமங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் தனுஷ். ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும்வகையில் ஓபனிங் காட்சியில் ரசிகர்களுக்காக செம குத்தாட்டம் ஆடி இருக்கிறார். முதற்பாதியில் பெரிய சண்டை காட்சிகள் இல்லை. கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய பைட்டில் பின்னி எடுக்கிறார். மம்முட்டிக்கும், தனுசுக்குமான பாசக்காட்சிகள் ஓகே. ஆனால் ஸ்ரீலீலா, தனுஷ் ஜோடிக்குள் கெமிஸ்ட்ரி இல்லை. கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஓரளவு அடக்கி வாசித்து நடித்து இருக்கிறார். அதனால் நிறைய ஹீரோயிசம், கமர்ஷியல் காட்சிகள் இல்லை. கிளைமாக்சில் கூட சாய் பல்லவிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் தனுஷ்.
அவர் மனைவியாக வரும் ஸ்ரீலீலாவுக்கு நடிக்க வாய்ப்பு இல்லை. அவர் வரும் இடங்களிலும் பிளஸ் இல்லை. ஏன் அவருக்கு நல்ல சாங் கூட இல்லை. தனுஷ் அப்பாவாக வரும் இந்திரன்ஸ் கேரக்டர், அவருக்கு ஏற்படும் முடிவு உருக்கம்.
நித்யா ரெட்டி என்ற போலீஸ் ஆபிசராக வரும் சாய் பல்லவி ஓபனிங் காட்சி, அவரின் ஆபரேசன் பிளான். குறிப்பாக இடைவேளைக்குபின் குற்றவாளிகளை விசாரிக்கும் பாணி, அந்த கம்பீரம் , அந்த ஸ்டைல் சூப்பர். அப்பா, கணவரை இழந்தவராக அவர் கேரக்டர் சொல்லப்பட்ட விதமும் அருமை. கிளைமாக்ஸ் பைட் , அடுத்து வரும் சீன்களால் அவர் மனதில் நிற்கிறார்.
படத்தில் பல இடங்களில் தனுஷை விட மம்முட்டி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அமைதியான டயலாக், இயல்பான பாடிலாங்குவேஜ் என பல இடங்களில் கலக்கி இருக்கிறார். கெட்ட வேலை செய்யும், அதாவது கடத்தல்காரனாக மம்முட்டியை காண்பித்து இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுபவராக, நல்லவராகவும் காண்பிக்கிறார்கள். அவரை காப்பாற்ற தனுசும் நினைக்கிறார். இதெல்லாம் திரைக்கதை வீக். அவ்வளவு நல்லவராக மம்முட்டியை காண்பித்து இருப்பதும், அவருக்கு அவ்வளவு பாசிட்டிவ் சீன் இருப்பதும் ரசிக்க முடியவில்லை. அதுவும் நாடகத்தனமாக தெரிகிறது. கிளைமாக்ஸ் உட்பட பல இடங்களில் அவரை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. மம்முட்டி ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்
துபாய் பெரிய தாதாவாக நஸ்ரூதின் ஷா நடித்து இருக்கிறார். அவ்வளவு பெரிய நடிகரை வீணடித்து இருக்கிறார்கள். அவருக்கும் சில டயலாக் மட்டுமே.
பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி வனப்பகுதிக்குள் செம்மரம் வெட்ட சென்ற தமிழர்கள் பலர் என் கவுன்டர் செய்து கொல்லப்பட்டனர். அதை மையமாக வைத்து ஓம் படம் உருவாகி உள்ளது. அதை வைத்து கற்பனை கலந்து எடுக்கப்பட்ட இந்த கதையில் வீரியம் இல்லை. திரைக்கதை நேர்த்தி இல்லை. ஏன் ஆக் ஷன் கூட அதிகம் இல்லை. விசாரணை, கடத்தல், சந்தேகம் என பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு என் கவுன்டர், கிளைமாக்ஸ் சண்டை இரண்டிலும் சினிமாதனம். அமரன் எடுத்த இயக்குனரின் படமா இது என சந்தேகம் வருகிறது.
சாய் அபயங்கர் ஓபனிங் பாடல் ஓகே. பின்னணி இசை பரவாயில்லை. கிளைமாக்ஸ், காடு பைட்டில் ஓரளவு முயற்சித்து இருக்கிறார். காடு சம்பந்தப்பட்ட காட்சிகளில் எழில் அரசு ஒளிப்பதிவு பக்கா.
செம்மரம் வெட்ட செல்லும் தமிழக மலைவாழ் மக்களின் பின்னணி, அவர்களின் வாழ்வியல் சூழலை சொன்னது ஓகே. ஆனால் அவர்கள் செய்தது சரி என சில இடங்களில் டோன் வருகிறது. ஆந்திர போலீஸ், வனத்துறை அதிகாரிகள் சிலர் வில்லன்கள் என்ற டோன் வருவது ஏற்க முடியவில்லை. குறிப்பாக மம்முட்டி நிஜ இமேஜை மனதில் வைத்து அவர் கேரக்டரை காண்பித்தது. படத்தின் கடைசி அரைமணி நேரம் படத்தின் மைனஸ். கிரைம் திரில்லர் விறுவிறுப்பு இல்லாமல் படம் இழுத்து கொண்டே போகிறது. நல்ல கதைக்களம், பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள், ஆனால் படம் நிறைவை தரவில்லை.
ஓம் - உளவாளியின் ஆட்டம்... கொஞ்சம் தடுமாற்றம்!

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…