விமர்சனம்
ஜி.கே.பிரசன்னாவின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பல்ல... நிச்சயம் பக்கா தொகுப்பு என்பது படத்திற்கு பெரும் பலம்.
அன்றைய பர்மாவின் ரங்கூனின் அழகையும், இன்றைய பர்மாவின் யங்கோனின் அழகையும் அசத்தலாக அள்ளி வந்திருக்கும் அனிஷ் தருண்குமாரின் ஒளிப்பதிவு, ஒவியப்பதிவு!
ஆர்.ஹெச்.விக்ரமின் நீயில்லா ஆகாயம்..., பம் பம் பம்... வாழ்த்துங்கடி, வாழ்த்துங்கடி.... உள்ளிட்ட பாடல் வரிகளும் இசையும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் இதம், பதம்.
ராஜ்குமார் பெரியசாமியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில், நம்ம மேல இருக்குறவங்களுக்கு நம்ம வேலை பிடிச்சிருந்தா போதும் நாமும் தன்னால் மேல வந்துடலாம்..., பணம் நிஜம் இல்ல... நிஜம் மாதிரி, இது வரைக்கும் நான் நல்லவனா கெட்டவனா தெரியாது... இனி உனக்காக நல்லவனா நடந்துக்குனுமுன்னு தோனுது உள்ளிட்ட வசனங்களாலும், பர்மிய அகதிகளால் சென்னை, எண்ணூர் அருகே பர்மா நகர் என்கிற அன்னை சிவகாமி நகர் பிறந்த கதை, ஹவாலா பண விளக்கம், சிட்டிபஸ் கம்பி திருகி நாயகியின் கவனம் ஈர்க்கும் நாயகன் உள்ளிட்ட ரசனையான காட்சிப்படுத்தல்களாலும், ஒரு நண்பனின் துரோகத்தையும், ஒரு சில நண்பர்கள் நட்புக்கு தரும் நம்பிக்கையான முக்கியத்துவத்தையும் மிக அழகாக கதையோடு கோர்த்து வாங்கியிருக்கும் இயக்குனரின் சாமர்த்தியத்தாலும் ரங்கூன் பெரிதாக ஈர்க்கிறது!
மொத்தத்தில், ரங்கூன்- நிச்சயம் லயிப்பான் ரசிகன்!

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!