விமர்சனம்
அ நிறம் | அளவு
கோவாவில் 1947ல் நடக்கும் வன்முறை கலந்த கேங்ஸ்டர் கதை. அதில் அப்பா, மகன் பாசம், அக்கா, தம்பி பாசம் கலந்து ரத்த விருந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அக்கா நயன்தாராவின் பாசம், தியாகத்தால் வளர்ந்து தாதாவாக மாறி இருக்கும் யஷ், கோவா டான் ஒருவரின் மகளான லாராவை மணக்க இருக்கிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் கியாரா அத்வானி மீது யஷ் காதல் வயப்பட பிரச்னை தொடங்கிறது. டான் மகள் வேணாம். உனக்கு கியாரா தான் சரியான தேர்வு என அக்காவும் தம்பிக்கு சப்போர்ட் பண்ணுகிறார். சும்மா இருப்பாரா டான், பல வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுகிறது. அக்கா, தம்பிக்கு என்ன நடந்தது. கியாரா அத்வானி கதி என்ன என்பதை ரத்தம், வன்முறை, சண்டை, வெட்டு, குத்து, துப்பாக்கி, வெடிகுண்டு, பழிவாங்கல் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கீது மோகன் தாஸ்.
படத்தில் அம்மா, மகன் பாசம் இருக்கிறது. அக்கா, தம்பி பாசம் இருக்கிறது. அப்பா, மகள் பாசம், அப்பா, மகன் பாசம் இருக்கிறது. காதல் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் விட கோபம், சண்டை, வெறி அதிகமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் யஷ் நடித்த கேஜிஎப், கேஜிஎப் 2வை விட ஓவர் வயலன்ஸ். பெரும்பாலான சீன்களில் ஏதாவது ஒரு கேரக்டர் சிகரெட் பிடித்து கொண்டே, சரக்கு அடித்து கொண்டே இருக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை கெட்டவார்த்தைகள் சர்வ சாதாரணமாக படத்தில் புழங்குகிறது. அந்த மாதிரி காட்சிகளும் ஆங்காங்கே.
மூன்று மாறுபட்ட கெட் அப்ப்பில் வருகிறார் யஷ். அவர் கோபம் கலந்த முரட்டுதனமான நடிப்பு, உழைப்பு ஓகே. ஆனால் அதுவே ஓவர் டோஸ் ஆகி பார்வையாளர்கள் பிபியை அதிகரிக்க வைக்கிறது. ஓவர் ஹீரோயிசம், பில்டப் பொறுமையை சோதிக்கிறது. முதற்பாதியில் கம்பீரமாக, ஸ்டைல் ஆக வரும் யஷ், இரண்டாவது பாதியில் சற்றே வயதான வேடத்தில் வருகிறார். அந்த கெட் அப் செட் ஆகவில்லை. அதிலும் கடைசி ஒருமணி நேரம் அப்பாடா முடியலை. பெண் இயக்குனர் எடுத்த படமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான, பெண்களை தவறாக காண்பிக்கும் காட்சிகள் அதிகம். யஷ் கேரக்டர் அவர் செய்யும் செயல்கள், வன்முறையால் அவர் மீதான இமேஜ் சரிகிறது. கேஜிஎப் இரண்டு பாகங்களில் சம்பாதித்த நல்ல பெயரை இதில் இழக்கிறார். இதில் அவரே கூடுதல் கதை எழுதி இருக்கிறார். எதுக்கு இவ்வளவு வன்மம் என்பது அவருக்கே வெளிச்சம். கிளைமாக்சில் அவர் கேரக்டர் மன ரீதியாக வேறு மாதிரி மாறுகிறது. அந்த நடிப்பை பார்த்தால் தியேட்டரை விட்டு ஓடுகிற மன நிலை வருகிறது.
அக்காவாக வரும் நயன்தாராவுக்கு உண்மையில் மாறுபட்ட படம். அவர் கேரக்டர் சில இடங்களில் ஹீரோயினை விட வலுவாக இருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். என்ன, தாதா கதை என்பதால் சிகரெட் குடிக்கிறார். சரக்கு அடிக்கிறார். இடைவேளை அதற்கு முந்தைய சீன்களில் அவர் நடிப்பு அருமை. என்ன இடைவேளைக்குபின் அவர் காட்சிகள் இல்லை. இரண்டாம்பாதியில் ருக்மினி வசந்த் வருகிறார். அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை. யஷ் காதலியாக வரும் கியாரா அத்வானி காட்சிகள் தான் படத்தில் கொஞ்சம் ஆ றுதல். அவர் நடிப்பும் அபாரம். டஜன் டஜன் ஆக வில்லன், அடியாட்கள் வருகிறார்கள், சாகிறார்கள். இதெல்லாம் பல பட படங்களில் பார்த்து புளித்தது. ஹுமா குரேஷி வில்லத்தனம் கச்சிதம்
ஒரு கூட்டத்தில் அப்பா யஷ், மகன் யஷ் மோதிக் கொள்கிறார்கள். அந்த சீன் எப்படா முடியும் என இருக்கிறது. மகன் யஷ் கேரக்டர், நடிப்பு கதைக்கு செட் ஆகவில்லை. அவர் கத்திக் கொண்டே இருக்கிறார்.
ஆக் ஷன் படம் என்பதால் சீனுக்கு சீன் ரத்தம் தெறிக்கிறது. ஒவ்வொரு கால் மணிநேரத்துக்கு ஒருமுறை சண்டை, வயலன்ஸ். கொத்து கொத்தாக செத்து கொண்டே இருக்கிறார்கள். குறைந்தபட்சம் சில ஆயிரம் பேர் செத்திருப்பார்கள். சில சீன்களில் மட்டும் போலீஸ் வருகிறது.
வன்முறை, சண்டை காட்சிகளைக் கண்களை மூடிக்கொண்டு பார்க்க வேண்டிய நிலை. பல சீன் மனதை காயப்படுத்துகிறது. பலகீன மனது உடையவர்கள், பெண்கள் ரொம்பவே பாதிப்பு அடைவார்கள். பெரும்பாலான சீன்கள் நெகட்டிவ் எண்ணத்தை, வக்கிர எண்ணத்தை அதிகரிக்கிறது.
படத்தோட சில பிளஸ் என்றால் வசனங்கள், சில இடங்களில் அது பக்காவாக செட்டாக இருக்கிறது. அப்புறம் ராஜீவ் கேமரா வொர்க், அந்த காலகட்ட கலர்புல் கிளப், வீடு, தாதாக்கள் நிறைந்த கோவாவை அழகான காண்பிக்கிறது. செட் வொர்க், சிஜி வொர்க்கில் உழைப்பு தெரிகிறது. சண்டைகாட்சிகளில் அனல் தெறிகிறது. கியாரா அத்வானி சம்பந்த காதல் சீன், எமோசன் சீன் படத்துக்கு பிளஸ். பாடல்கள் செட் ஆகவில்லை என்றாலும் ரவி பஸ்ரூர் இசை பிளஸ். ஆனால் பல இடங்கள் ஓவர் சவுண்ட் நெகட்டிவ். முதல் பாதியை கூட ஒரளவு மன்னிக்கலாம். இரண்டாம் பாதி ரொம்பவே டார்ச்சர். வயதான யஷ், அவரிம் திருமணம், மகன், முதல் காதலி மகன், அவன் டார்ச்சர், சண்டை என தலைவலி. நீளமான கிளைமாக்ஸ், அதில் வரும் டிவிஸ்ட், மன பாதிப்பு, முடியாத சண்டை எல்லாமே இது யஷ் படமா என கேள்வி எழுப்புகிறது. கதையுடன் கனெக்ட் ஆகவே முடியவில்லை.
இந்த கதையில் கீதுமோகன் தாஸ் என்ன சொல்ல வருகிறார். என்ன எடுத்து இருக்கிறார். அவர் விஷன் என்ன என்பதை கடைசிவரை புரியவே இல்லை. அம்மாவை, அப்பாவை, அக்காவை, மகனை, காதலியை தவறாக காண்பிப்பது எந்த மாதிரியான மன நிலை. வன்முறை, சண்டை, பில்டப் சேர்த்து யஷ் காண்பித்து என்ன எடுத்தாலும் மக்கள் ரசிப்பார்கள் என நினைத்து பொறுமையை சோதிக்க வைத்து இருக்கிறார். படம் முழுக்க யாராவது செத்து கொண்டே இருக்கிறார்கள் அல்லது சித்ரவதை பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கூடவே ரசிகர்களும் சேர்ந்து... இப்படிப்பட்ட காட்சிகளுடன் மனித உணர்வுகளுடன் மலிவாக விளையாடி சினிமா மொழியை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.
படம் முடிந்தபின் வெளியே வரும்போது காட்டு கத்தல், துப்பாக்கி சண்டை, ரத்தவாடை, வன்முறை, வக்கிரம் இல்லாத நிம்மதியான காற்றை சுவாசிக்கும் போது அப்பாடா நம்ம இருக்கிற உலகம் எவ்வளவு அமைதியானது என்ற உணர்வு வருகிறது. அப்படியானால் மூன்றே கால் மணிநேர அந்த நச்சு எவ்வளவு கொடுமையானது என புரிந்து கொள்ளுங்கள். தலைப்பு போலவே ‛டாக்சிக் கன்டென்ட் நிறைந்த வக்கிர கதை.
டாக்சிக் - சித்ரவதை

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!