
டாக்சிக் எனக்கு புதிய பாதையை அமைக்கும் : யஷ் நம்பிக்கை
டாக்சிக் படம் குறித்து யஷ் கூறுகையில், ‛‛இந்த படம் எனது கேரியரில் ஒரு புதிய பாதையை அமைக்கும் படமாக இருக்கும். இது தைரியமான மற்றும் பிரம்மாண்டமான படைப்பு மட்டுமல்ல, உங்கள் மனதை மயக்கும் படைப்பு. இப்படத்தின் காட்சியமைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும். முற்றிலும் புதிய சினிமா அனுபவத்தை தரும் என்று கூறியுள்ளார் யஷ்.
கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்குத் தணிக்கைக் குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் யஷ், ராயா என்ற தந்தை வேடத்திலும், ரூமி என்ற மகன் வேடத்திலும் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 26ம் தேதி அன்று உலகம் முழுவதும் சுமார் 12,000 திரையரங்குகளில் கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் இப்படம் வெளியாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!