
டாக்சிக் போட்டியை சமாளிக்குமா இந்த வாரப் படங்கள்?
"கேஜிஎப்" படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் வசூலில் சாதனை புரிந்த கன்னட நடிகராக யஷ் இருக்கிறார். அந்தப் படத்திற்குப் பிறகு சுமார் நான்கு வருட இடைவெளியில் அவர் நடித்துள்ள "டாக்சிக்" படம் நாளை மறுதினம் ஆக., 26ம் தேதி வெளியாகிறது.
"கேஜிஎப்" படங்கள் அளவிற்கு இந்த "டாக்சிக்" படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் நிறைய தியேட்டர்களில் வெளியாக வாய்ப்புள்ளது. படம் நன்றாக இருந்தால் வழக்கம் போல வசூலைக் குவிக்கலாம்.
இருந்தாலும் இந்த வாரம் ஆகஸ்ட் 28ல் வெளியாக உள்ள நேரடி தமிழ்ப் படங்கள் "டாக்சிக்" படத்தால் குறைந்த தியேட்டர்களைப் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியை அப்படங்கள் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது அந்தப் படங்கள் வெளியான பிறகே தெரிய வரும். அதில் "டாக்சிக்" படத்தின் ரிசல்ட்டும் அடங்கி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!