
ஜெயிலர் 2, ரணபாலி : அடக்கி வாசிக்க படக்குழுவினர் முடிவு
இரண்டு படங்களுமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாகின்றன. இருப்பினும், இந்த இரண்டு படங்களின் புரமோஷன்களையும் படக்குழுவினர் அடக்கி வாசிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் வெளியான "டாக்சிக்" படம் ஏற்படுத்திய பாதிப்புதான் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். பெரிய அளவில் பேசப்பட்டு அந்தப் படம் கடைசியில் படுதோல்வியை அடைந்தது. அதனால், ஏற்பட்ட நூற்றுக்கணக்கான கோடி நஷ்டம் குறித்து இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
"ஓவர் ஹைப்" ஏற்றி விட்டு ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் போவதை விட, எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்து ரசிக்கட்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…