
டாக்சிக் ஓடிடி : யஷ் பட குழுவினருக்கு மற்றொரு பெரிய அடி
அதனால் ஓடிடி ஒப்பந்தம் எதுவும் உறுதியாகாமல் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் வெளியானவுடன் படம் பார்வையாளர்களிடமிருந்து கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. இந்த பிரம்மாண்ட படம் வெளியான உடனேயே பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்ததால், பல ஓடிடி நிறுவனங்கள் பின்வாங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, டிஜிட்டல் உரிமைகளுக்காக ஜீ5 நிறுவனம் ரூ. 30 கோடியை வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது முழு குழுவிற்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அது போதாதென்று, ஓடிடி தளம் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதாம். அதாவது மொத்தத் தொகையில் பாதியை மட்டுமே முன்கூட்டியே வழங்குவதாகவும், மீதமுள்ள தொகையை பே-பர்-வியூ முறையுடன் இணைத்துள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஒரு படத்திற்கு, திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே ஓடிடி ஒப்பந்தத்தை முடிக்காமல் விட்டதால் மிகபெரிய இழப்பை சந்தித்துள்ளார் யஷ்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!