விமர்சனம்
அ நிறம் | அளவு
காலேஜில் இருந்து சஸ்பெண்ட் ஆன டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக் ஆகியோர், விஞ்ஞானி குரேஷியின் ஆய்வு கூடத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு டிரோன்ஸ்(பறக்கும் கேமரா) மூலமாக அவர்களுக்கு சாப்பாடு வருகிறது. அதை பயன்படுத்தி பக்கத்தில் உள்ள ஒரு பழைய வீட்டில் இருக்கும் சித்தி இத்னானி பார்த்து, அவர் மீது காதல் வயப்படுகிறார் டிராவிட். அவ்வப்போது அந்த ஆய்வு கூடத்தில் இருந்து ரகசிய வழியில் சென்று அவரை சந்திக்கிறார். ஆனால், சித்தி இத்னானியோ தனது சூனியக்காரி பாட்டிக்கு பயப்படுகிறார். அவர் நம் காதலை சேர்த்து வைக்கமாட்டார் என்கிறார். விஞ்ஞானி குரேஷி மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு பெண் ரோபோவை உருவாக்குகிறார். டான்சிங் கொலைகாரனை தேடுகிறார் போலீஸ் அதிகாரி சதீஷ். இவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சூனியக்காரி பாட்டி தேவதர்ஷினி பிடியில் சிக்குகிறார்கள். அந்த பாட்டி யார்? என்ன நடந்தது என்பது டிரோன்ஸ் படத்தின் கதை.
நட்பு, காதல் கலந்த கதையை அறிவியலையும், சாபம், சூனியத்தை கலந்து ஒருவித திரில்லர் ஜானரில் கொடுத்து இருக்கிறார் இயக்குனர். ஆனால், இது பேய்க்கதை இல்லை. கதைநாயனாக வரும் டிராவிட் செல்வம் நடிப்பு, காதல் காட்சிகள் ஓகே. அந்த பங்களாவில் சிக்கிக் கொண்டு தவிப்பது, பாட்டியை பார்த்து பதறுவது என தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார். அவர் நண்பராக வரும் ஆர்.ஜே.தீபக் கேரக்டர். அவர் அடிக்கிற பன்ச் டயலாக், புலம்புகிற விஷயங்கள் ஓரளவு படத்தை கலகலப்பாக்குகிறது.
இன்னொரு தோழியாக வரும் அஞ்சலி நாயருக்கு ஆரம்பத்தில் நடிக்க வாய்ப்பில்லை. ஆனால், கிளைமாக்சில் 5 நிமிடம் சில விஷயங்களை பேசி மனதில் இடம் பிடிக்கிறார். எது அழகு, கறுப்பு என்றால் குறைவா? என அவர் கேட்கிற கேள்விகள் பலரின் மனசாட்சியாக இருக்கும். அந்த இடம் கைதட்டல் பெறுகிறது. விஞ்ஞானியாக வரும் குரேஷி ஓவர் ஆக்டிங்கில் படுத்தி எடுக்கிறார். அவர் சீன்கள் குழப்பம், அதை குறைத்து இருக்கலாம். அவர் பேசிய விஞ்ஞானம், ரோபோ மாடல் கண்டுபிடிப்பை எளிமைப்படுத்தி இருக்கலாம்
சித்தி இத்னானியை சுற்றிதான் கதையே நகர்கிறது. தேவதை மாதிரி இருக்கிறார். இன்னொரு இடத்தில் ரோபோவாக நடிக்கிறார். காதல் கை கூடுமா என தவிக்கிறார். பாட்டிக்கும், அவருக்குமான அந்த மாற்றங்கள், சண்டை, மனப்போராட்டம் படத்தின் ஹைலைட். அந்த இடங்கள் செட்டாகி இருக்கிறது.
பாட்டியாக மாறுபட்ட கெட்அப்பில் வருகிறார் தேவதர்ஷினி. மேக்கப், காஸ்ட்யூம் ஓகே. ஆனால், அவர் நடிப்பு, அவர் செய்கிற விஷயங்கள் கதையுடன் அதிகம் ஒட்டவில்லை. அவரின் கோபம், ஆசை, வெறுப்பு, துரத்தல் சிலருக்கு பிடிக்கலாம். ஆனால், அந்த கேரக்டர் அதிக சத்தம், அதிக பில்டப், ஓவர் சினிமாதனமாக இருக்கிறது. இன்னும் அழுத்தமாக நடித்து இருந்தால் தேவதர்ஷினிக்கு பாராட்டுகள் கிடைத்து இருக்கும். போலீஸ் ஆபிசராக வரும் சினிமாவாலா சதீஷ்க்கு நல்ல கேரக்டர். கிளைமாக்சில் திருமணம் குறித்து அவர் பேசுகிற விஷயங்கள், எடுக்கிற முடிவு அதிர்ச்சி கலந்த அற்புதமான விஷயம்.
குரேஷியின் பிளாக் ஹோல் என்ற ஆய்வுக்கூடம், அந்த பாழந்த வீட்டிலேயே பெரும்பாலான கதை நடக்கிறது. அதுவே போராடிக்கிறது. அதேபோல், முதற்பாதி இழுவை. அதிக வசனங்கள், புரியாத விஷயங்கள், குழப்பமான சீன்கள் கதைக்கு மைனஸ். இடைவேளைக்குபின் பேத்தி, பாட்டி மோதல், அந்த வீட்டில் சிக்குபவர்கள், பொம்மை கதை, அதிலிருந்து விடுபடும் திட்டம் என ஓரளவு பரவாயில்லை. கிளைமாக்சில் நல்ல கருத்தை சொல்லி படத்தை முடிக்கிறார் இயக்குனர். டிரோன்ஸ் தான் படத்தில் வரும் முக்கியமான விஷயம். அதை கூட ஆர்ட் டைரக்டர் சரியாக செய்யவில்லை.
குழந்தைகளுக்கான படம் மாதிரியும் இல்லை. பெரியவர்கள் ரசிக்கும் கதையும் இல்லை. இரண்டையும் குழப்பி இருக்கிறார்கள். ஒரு வித்தியாசமான பேண்டசி கதையை சரியாக சொல்லாமல் படத்தை இழுத்து இருக்கிறார் இயக்குனர். அறிவியல், ரோபோ, சாபம், சூனியக்காரி, பாழந்த பங்களா, பிளாக் ஹோல், ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்... என பல விஷயங்களை சொன்னவர், அதை இன்னும் புது கோணத்தில் சொல்லியிருக்கலாம். முதற்பாதி ஆய்வக சீன்களின் நீளத்தை குறைத்து இருக்கலாம். படம் முழுக்க வசனங்கள் அதிகம். அதை சரி செய்து இருக்கலாம். பங்களா, பாட்டி சீன்களில் ஜெயந்த் மாதவன் கேமரா வொர்க் சிறப்பு. இசை பரவாயில்லை ரகம். பாட்டி, சூனியக்காரி, கார்ட்டூன் கதை விரும்புகிறவர்களுக்கு மட்டும் பிடிக்கும்.
டிரோன்ஸ் - ஆண்களை வெறுக்கும் சூனியக்காரி பாட்டி கதை

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!