விமர்சனம்
அ நிறம் | அளவு
சாராய வியாபாரி மற்றும் தாதாவான விஜய் சேதுபதி ஒரு பள்ளி பாத்ரூமில் 8 நாட்கள் அடைத்து வைக்கப்படுகிறார். என்னை அடைத்து வைத்த அடையாளம் தெரியாத அந்த நபரை கொல்வேன் என துடிக்கிறார் வெளியே வந்த விஜய்சேதுபதி. அவரை பாத்ரூமில் இருந்து காப்பாற்றும் சிறுவன் சாய்தான், அவரை அடைத்தும் வைத்தவன். அது ஏன்? கடைசியில் விஜய் சேதுபதிக்கு உண்மை தெரிந்ததா? தன்னை கண்டுபிடித்து ஏதாவது செய்து விடுவாரா என பயத்தில் தவிக்கும் அந்த சிறுவனுக்கு என்ன நடந்தது. இதுதான் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான பத்தா படத்தின் கதை.
ரொம்ப சிம்பிளான கதை கரு. அதை அதை உணர்ச்சிபூர்வமாக எளிமையாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். 1986ல் கதை நடக்கிறது. சென்னையை அடுத்த காலடிபேட்டை ஏரியாவில் கோபக்கார தாதாவான பத்தாவை பார்த்து பயப்படுகிறான் சிறுவன். ஆனால், சூழ்நிலை காரணமாக ஒரு பள்ளி பாத்ரூமில் 8 நாட்கள் அவரை அடைத்து வைக்க வேண்டிய நிலை. ஆனால் தினமும் காலையில் பொறை கொடுக்கிறான். இப்படி செல்கிறது கதை.
நான் யார் தெரியுமா, வெளியே வந்தால் அவ்வளவு தான் என மிரட்டும் விஜய்சேதுபதி ஒரு கட்டத்தில் என்னை வெளியே விடு என கெஞ்சும் நிலைக்கு வந்து விடுகிறார். பாத்ரூமில் அவருக்கு ஞானம் பிறக்கிறது. யார் இப்படி செய்கிறார் என தெரியாமல் தவிக்கிறார். அடுத்து தன்னை அடைத்து வைத்தது அந்த சிறுவன் என தெரியாமல் அவனுடன் பாசமாக பழகுகிறார். அந்த இடமும் வெகு எதார்த்தம்.
1986 காலகட்ட ஹேர் ஸ்டைல், அந்த தெனாவட்டு, மனைவி, மகளிடம் பாசம் என பல இடங்களில் விஜய் சேதுபதி நடிப்பு படத்தை காப்பாற்றி இருக்கிறது. தன்னை அடைத்து வைத்தது யார் என்பதை அவர் கண்டுபிடிக்க அவர் போடும் திட்ட சீன்கள் புதுசு. என்ன ஆள் வெயிட்டாக இருக்கிறார். பல சீன்களில் ஒரே மாதிரி நடிக்கிறார். சில பழைய படங்களின் நடிப்பு சாயல் வருவதும் மைனஸ். அவருக்கு பாடகர் பிளாஷ்பேக் இருக்கிறது. அது படத்துக்கு வேகத்தடை. அது இல்லாமல் படத்தை முடித்து இருந்தால் படம் இன்னும் டச்சிங் ஆக இருந்து இருக்கும். விஜய் சேதுபதி தனித்தன்மை நடிப்பு, அந்த கேரக்டர் மாறும் விதமும் நச்.
விஜய் சேதுபதி மனைவியாக வரும் லிஜோ மோல் ஜோஸ் அந்த கேரக்டருக்கு வலு சேர்த்து இருக்கிறார். அந்த முக்குத்தி, அந்த கெட் அப், அந்த பாசம் எல்லாமே கவிதை. அவருக்கு இன்னும் நிறைய காட்சி வைத்து இருக்கலாம்.
பத்து படத்தின் உயிர் நாடி. அந்த சிறுவன் சாய் கேரக்டர், அந்த சிறுவனின் நடிப்பு. முதல் படம் என்றாலும் அவ்வளவு அருமையாக நடித்து இருக்கிறான். பத்தாவை பார்த்து பயப்படுவது, பாத்ரூமில் அடைத்து விட்டு, தினமும் காலையில் அக்கறையாக பொறை கொடுக்கிற சீன் டச்சிங். விஜய் சேதுபதிக்கும் அவருக்குமான சீன் கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கு கிறது. அவன் கெட் அப், பாடிலாங்குவேஜ், பேச்சு எல்லாமே மனதில் நிற்கிறது.
குறிப்பாக இரண்டாம் பாதியில் தன்னை கண்டுபிடித்து விடுவாரோ என தவிக்கும் இடங்கள் அடடா. கிளைமாக்ஸ்க்கு முன்பு, நான் ஏன் அப்படி செய்தேன் என கண்களில் கண்ணீருடன் அந்த சிறுவன் விவரிக்கும் சீன் மனதை உலுக்குகிறது. அந்த இடத்தில் நாமும் கலங்குவது நிச்சயம். குழந்தைகளின் பயம், அவர்கள் உலகம், தாதாக்களின் மனித நேயம், குடும்ப உறவுகள், மனித வாழ்வியல், மன்னிப்பு, பாசம் என பல விஷயங்களை கதை பேசுகிறது. அதை இயல்பாக எடுத்து இருக்கிறார் இயக்குனர். ஆனால் கமர்சியல் விஷயங்கள், அனைத்து தரப்பும் விரும்பும் விஷயங்கள் குறைவு.
குழந்தைகள் உலகத்தை, அவர்களின் மனநிலையை அவர்கள் பார்வையில் சொல்லும் பத்தா கதையமைப்பில் நிச்சயமாக மாறுபட்ட படம் தான். இப்படி கோணத்தில் யாரும் எடுத்தது இல்லை. ஆனால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரி கலகலப்பு இல்லை. சிறுவன் சாய்க்கு நிறைய விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். சாய் அப்பாவாக வரும் ஹரி, ,அம்மா சாண்டி, விஜய்சேதுபதி ஆதரவாளர்கள், எதிரிகள் என பலரும் மனதில் நிற்கிறார்கள்.
1980களின் அந்த ஊர் பின்னணி, அந்தகால சென்னை, வீடுகள், பொருட்கள், பள்ளி, கச்சேரியை நேர்த்தியாக காண்பித்து இருப்பது சிறப்பு. சாய் அபயங்கர் பாடல்கள் ஓகே. ஆனால் எதிர்பார்த்தது நிறைய.
ஒரு மெல்லிய மனித உணர்வை, ஒரு மன போராட்டம், ஒரு சிறுவனின் மனநிலையை, தாதாவின் வாழ்க்கையை, அந்த வாழ்க்கை மாற்றத்தை சொன்னதில் இயக்குனர் பாலாஜிதரணி தரன் ஜெயித்து இருக்கிறார்.
பத்தா - தாதாவுக்கும், சிறுவனுக்குமான கண்ணாம்பூச்சி ஆட்டம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!