
ஜேசன் சஞ்சயின் சிக்மா முதல் பத்தா வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்....!
பத்தா
இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், மாஸ்டர் சாய் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் "பத்தா". ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவிந்தது. இந்த திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
சிக்மா
முதல்வர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் "சிக்மா". இதில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ் ஆகியோர் நடித்து இருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நாளை நெட்பிளிக்ஸில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இம்மார்டல்
புதுமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் வெளியான திரைப்படம் "இம்மார்டல்". ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.
அக்கா
தெலுங்கு இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "அக்கா". இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.
தி டார்க் ஹெவன்
எஸ். பாலாஜி இயக்கத்தில் சித்து சித், தர்ஷிகா மற்றும் ரித்விகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் " தி டார்க் ஹெவன்". இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா தமிழில் நாளை வெளியாகவுள்ளது.
லவ் ஆல்வேஸ்
மதுமிதா இயக்கத்தில் கவுரி கிஷன், ரம்ஜான் முகமது, ஜெய் பிரகாஷ், ஜெயசுதா, மாய கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் "லவ் ஆல்வேஸ்". இந்த தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…