விமர்சனம்
அ நிறம் | அளவு
இலங்கை இறுதி போரில் தனது மனைவியை இழந்த அமர் ராமச்சந்திரன், தனது மகள் நேஹாவை அழைத்துக் கொண்டு 2008ம் ஆண்டு தமிழகத்திற்கு அகதியாக வருகிறார். தன் மனைவியின் சகோதரி வீட்டில் மகளை ஒப்படைக்க நினைக்கிறார். ஆனால் அது நடக்காமல் அவருக்கு அவமானமே மிஞ்சுகிறது. வேறு வழியின்றி சூழ்நிலை காரணமாக தென்காசி அருகே உள்ள கிராமத்தில் ரோட்டில் வசிக்கிறார். பெட்டிகடை வைத்திருக்கும் பாலாசிங், அந்த ஏரியாவில் ஆட்டோ ஓட்டுபவர்கள் ஈழ தமிழர்கள் என அனுதாபத்தில் உதவி செய்கிறார்கள். மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், தனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என நினைக்கிறார் அந்த பாசக்கார அப்பா. அது நடந்ததா? அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தாய் நிலம் படக்கரு.
மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் எடுத்திருக்கும் ஈழத்து கதை. போர், அரசியல் என செல்லாமல் அப்பா மகள் பாசக் கதையாக கொண்டு போய் இருக்கிறார்கள். இலங்கை சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டுமே வருகிறது. பெரும்பாலும் தென் காசி கிராமம் பின்னணியில் அதுவும் ரோட்டிலேயே அதிக காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கு ஊர்க்காரர்கள் உதவுவது போன்ற கதையமைப்பு டச்சிங்.
கதையில் பெரும்பாலான சீன்களில் அப்பா, மகள் வருகிறார்கள் அல்லது அவர்களை சுற்றி அந்த சீன் நகர்கிறது. அப்பாவாக நடித்த அமர் ராமசந்திரன் அந்த கேரக்டருடன் ஒன்றி விட்டார். மகளுக்காக அவர் வாழ்கிற வாழ்க்கை, மகளின் நிலை நினைத்து ஏங்குகிற இடங்கள், மகள் தவறு செய்த போது அடிக்கிற கோபம், இரவில் கதை சொல்வது என படம் முழுக்க நிறைவான நடிப்பை தந்து இருக்கிறார். அவர் தோற்றமும், உடல் மொழியும், இலங்கை தமிழ் ஸ்லாங்கும் கதைக்கு வலு ஊட்டி இருக்கிறது. அடிக்கடி அகதியாக, இலங்கையுடன் தொடர்புப்படுத்தி பேசுவதும் படத்தின் பிளஸ்.
அவர் மகளாக வரும் நேஹா குறைவாக பேசினாலும் நிறைவான நடிப்பை தந்து இருக்கிறார். பலருக்கு தங்களின் மகள்களை அவர் நினைவூட்டுவார். கிளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு, அடுத்து செய்யும் செயல்கள் உருக வைக்கிறது.
பாலாசிங் மறைந்து சில ஆண்டுகள் ஓடிவிட்டாலும் இதில் அவரின் சிறந்த நடிப்பை பார்த்து பாராட்ட தோன்றுகிறது. ஆட்டோ டிரைவர்கள், ஒரு மீசைக்கார ஆசாமி, சிறுமியின் அம்மா என பலரும் கேரக்டருக்கு ஏற்ப தங்கள் பங்களிப்பு செய்து இருக்கிறார்கள்.
2008ல் கதை நடப்பதால் அந்தகால தெருக்கள், கிராமத்து பின்னணியை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்கள். அதை சிம்பிளாக காண்பிக்கிறது பிரசாந்த் கேமரா. நம் இனம் அழக்கூடாது. அழுதால் தோற்றுவிடும் என்ற வசனமும், அதையொட்டி நடக்கிற கிளைமாக்ஸ் சீனும் பவர்புல். பல இடங்களில் பாசிட்டிவ் சீன், வசனம் இருப்பது ஆறுதல்.
அப்பா, மகள் பாசக்கதைகள் பெரும்பாலும் சோகத்தில் முடியும். தாய் நிலமும் அப்படியே. அந்த கிளைமாக்ஸ், அடுத்த நடக்கும் விஷயங்கள் சினிமாதனமாக இருக்கிறது. கொஞ்சம் வலியை ஏற்படுத்தினாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது படத்தின் பெரிய மைனஸ் ஆகிவிடுகிறது. ரோடு, அப்பா, மகள் பாசம் என கதை சின்ன இடத்தை சுற்றி வருவதும், படத்தின் வேகத்துக்கு தடை. நல்ல கதை, நல்ல நடிப்பு என்றாலும், கிளைமாக்ஸ் காரணமாக தாய் நிலத்தை கொண்டாட முடியவில்லை.
தாய் நிலம் - சோகம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!