நம்மவர் கரண் கிட்டத்தட்ட நாம் மறந்த நிலையில் மீண்டும் நாயகராக நடித்து வந்திருக்கும் படம் தான் "உச்சத்துல சிவா
தேவி கரண் வழங்க "கே"எண்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் நடிகர் கரணே தயாரித்திருக்கும் இப்படத்தை நடிகர் கரணே தயாரித்திருக்கிறார். ஜேப்பி இயக்கி இருக்கிறார்.
கால்டாக்ஸி டிரைவர் கரண் ., ஒரு முறை மணப்பெண் கோலத்தில் தன் வண்டியில் பதட்டத்துடனும் படபடப்புடனும் ஏறும் பெண்ணிடம் மெல்ல பேச்சக் கொடுக்கிறார். மணமகன் பிடிக்காததால் , கிளம்பி வந்து விட்டதாக கூறும் அப்பெண் சொல்வதையெல்லாம் ஒரேயடியாய் நம்பும் கரண்.,ஒரு தலையாய் காதலிக்கவும் செய்கிறார். ஒருகட்டத்தில் அப்பெண் மணப்பெண் அல்ல ., தன் காதலனின் நலனுக்காக ., போதை மருந்து கடத்தி வந்தவர் ... அக் கடத்தலில் தன் காதலனின் சீரியஸ் நிலைக்கு காரணமான கடத்தல் கும்பலிடமிருந்து பழிக்கு பழியாக மருந்தை தனியாக கடத்தி விற்க முயன்றதால் ., அக்கடத்தல் கும்பலாலும் , போலீஸாலும் ஒரு சேர துரத்தப்படுபவர் ... என்பது தெரிந்ததும் கார் சவாரியை விடுத்து ஆக்ஷன் சவாரியில் இறங்கும் கரண் ., போலீஸுக்கு தெரிந்தும் , தெரியாமலும்... கடத்தல் கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் கதை தான் "உச்சத்துல சிவா" படத்தின் மொத்த கதையும் .
உச்சத்துல குரு தெரியும் .... சிவா எப்படி ? என லாஜிக்காக குழம்புபவர்களுக்கு இதுல நாயகர் கரண் பேரு சிவாங்கற "சி"ங்கன்னு சொல்லிக்க விரும்பறோம். அதுசரி., மணக்கோலத்துல இருக்கிற ஒரு இளம் பெண் ... மணப்பெண்ணா ., இல்ல ,ஒரு மாதிரிப் பெண்ணா (அதாங்க மருந்து கடத்துற பெண்ணான்னு ..) அம்மணியிடம் அடி உதை பட்டும் தன் கண் முன்னே அப்பெண் ., துப்பாக்கி குண்டடிபட்டும் கண்டுபிடிக்க முடியாத கால்டாக்ஸி டிரைவர் கரண்., லோக்கல் , இண்டர்நேஷனல் போதை தாதாக்களையெல்லாம் தாத்தாக்களாக கருதி போட்டுத் தாக்குவதை நம்ப முடியவில்லை . இடையிடையே ரஜினி , கமல் , எம்ஜிஆர் ஸ்டைலில் எல்லாம் பேசி நீண்ட இடைவெளிக்குப் பின் பெரிதாக வெறுப்பேற்றுகிறார் மனிதர்.
சுரண் தான் இப்படி என்று இல்லை ... திடீரென கார் ஓட்டி கரணையே தூக்கி ஓரங்கட்டி துப்பாக்கி முனையில் அவரை அடித்து, உதைத்து ஸ்டியரிங்கை தான் பிடித்து போலீஸிடமிருந்து தப்பிக்க வழி தேடும் கதாநாயகியில் தொடங்கி ., நேர்மையான போலீஸ் இன்ஸ் இளவரசு , கோணல் போலீஸ் ரமேஷ் கண்ணா , போதை போலீஸ் மகாநதி சங்கர் ,கரனின் லாக்-அப் நண்பர் சங்கிலி முருகன் , எஸ்கேப் நண்பர் கும்கி அஸ்வின் ,வில்லன் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட ஒவ்வொருத்தர் நடை , உடை , பாவனைகளிலும் ஏகமாய் நடிப்பது தெரியும் நடிப்பு ... படத்திற்கு பெரும் பலவீனம்.
வித்யாசாகரின் இசையில் பேசு பேசு இசை மொழி ... உச்சத்துல சிவன் தான் ... உள்ளிட்ட பாடல்கள் வெவ்வேறு வித ஆறுதல் .ஹார் முக்/வி.ஜெ.சாபு ஜோசப் பின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம்.
ஆனாலும் ., ஜேப்பியின் எழுத்து , இயக்கத்தில்., சொந்தப் படம் எடுத்து நடிக்கும் கரணே., பிளாக் மணியில தன் பிள்ளைய வச்சு படம் பண்றது மாதிரி .... என டயலாக் பேசுவதும் அடிக்கடி கோபாலா , கிருஷ்ணா என்று விட்டு சிவனாக அவதாரமெடுத்து வில்லன்களை நையப்புடைப்பதும்., அப்பாவி .,கால் டாக்ஸி டிரைவராக இருந்து கொண்டு காவல்துறையையும் தாண்டி செயல்படுவதும் .. என்ன தான் காமெடி... படமென்றாலும் ரொம்பவும் லாஜிக்காக இடிக்கிறது!
ஆகவேஉச்சத்துல சிவா - அப்படி ஒண்ணும் உச்சத்துல இல்ல ... ஆதலால் தியேட்டரில் டயலாக் போர்ஷனிலும் ., ரசிகன் எல்லாம் நிரம்பி வழியுறாங்க...உச்சா போற இடத்துல ..."