புதியவர் புவன் ஆர்.நல்லான் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேயாக மிரட்ட ., சுரேஷ் ரவி , ரமேஷ் திலக் , முனிஷ் காந்த் எனும் ராமதாஸ் , யோகி பாபு ,தர்புகா சிவா , மைம் கோபி , செல்வா உள்ளிட்டோர் உடன் நடிக்க., டபிள்யூ டிஎப் என்டர்டெயின்மென்ட் எனும் பேனரில் ரோஹித் ரமேஷ் தயாரித்திருக்கும் மிரட்டல் பேய் படம் தான் "மோ".
பொதுமக்களின் பலவீனத்தையும் , பயத்தையும் பணமாக்கிக் கொள்ளும் கும்பலைச் சார்ந்தவர்கள் அறிமுக நாயகர் சுரேஷ் ரவி தலைமையிலான நண்பர்கள் ரமேஷ் திலக், தர்புகா சிவா உள்ளிட்டோர் .அவர்களோட குடும்ப சூழலால் இப் படத்தில்சினிமா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷூம் , மேக்கப்மேன் முனிஷ் காந்த் ராமதாஸும் சேர., ஐஸ்ஸுக்கு முனிஷ் மூலம் பேய் வேஷம் போட்டு போலியாக பேய் ஓட்டி ., செமயாய் துட்டு பார்க்கும் இவர்கள்.,ஒரு கட்டத்தில் வகையாய் இவர்களிடம் ஏமாந்த ரியல் எஸ்டேட் பெரும் புள்ளி செல்வாவிடம் சிக்கிக் கொள்கின்றனர்.
அவரோ ., இவர்களை போலீஸு , கேஸு... என அலைகழிக்காமல் தன் பிஸினஸ் டெவலப்மென்ட்டிற்கு யூஸ் செய்து கொள்ளப் பார்க்கிறார் .அது எப்படி ? என்பது தான் ரசிகனை வசியம் செய்யும் "மோ" படத்தின் மோகினி ஆட்ட கரு , கதை , களம் , காட்சிப்படுத்தல் ...எல்லாம் .
ஐஸ்வர்யா ராஜேஷ் ., தன் தம்பியின் படிப்புக்காக பேயாக மிரட்டவில்லை ., கிட்டத்தட்டபேயாகவே வாழ்ந்திருக்கிறார் எனும் அளவிற்கு பிரமாதமாய் பயமுறுத்தியிருக்கிறார். வாவ்!
அறிமுக நாயகர் சுரேஷ் ரவி , அவரது நண்பர்களாக வரும் ரமேஷ் திலக் , ஐஸ்ஸின் மேக்கப்மேனாக வந்து பேயாகவும் மிரட்டும் முனிஷ் காந்த் எனும் ராமதாஸ் , கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் யோகி பாபு, தர்புகா சிவா , சாமியாராக வரும் சூப்பர் குட் சுப்பிரமணியம் , செல்வாவின் போட்டி ரியல் எஸ்டேட் அதிபர் மைம் கோபி , இவர்கள் எல்லோருக்கும் மேல் ரியல் எஸ்டேட் அதிபராக வரும்செல்வா உள்ளிட்ட எல்லோரும் பிரமாதமாய் நடித்திருக்கின்றனர்.
அதிலும் ,"என் எட்டாம்அறிவுக்கு எட்டுன வரைக்கும் இங்க ஏதும் வில்லங்கம் இல்லை..." என்றும் இந்த எலுமிச்சை பழத்தை ஆறடிக்கு குழி தோண்டி புதைச் சுடு ... என்றும் அசால்ட்டாய் சொல்லும் சாமியார் சூப்பர் குட் சுப்பிரமணியும் ,
"அய்யய்யோ பழனியோட அண்ணா ல்லாம் கிடையாது பழனி நான் தான் ... ஏன்னா நான் ஒரு பார்ன் ஆர்ட்டிஸ்ட் எனும் யோகி பாபுவும் செம ஹாசம்.
சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசைகதைக்கேற்ற மிரட்டல் ., கே.விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் அப்படியே ... இரண்டும் படத்திற்கு பெரும் பலம்.
புவன் ஆர்.நல்லானின் எழுத்து இயக்கத்தில்., பேய் வேடம் போட்டவர்களை நிஜ பேய் விரட்டும், மிரட்டும் காட்சிகள் செமரசனை ஒரு சில லாஜிக் குறைகளை மேஜிக்காய் கருத்தில் எடுத்துக் கொண்டோமென்றால் ., வழக்கமான பேய் படமாக இல்லாமல் காமெடியாகவும் , கலர்புல்லாகவும் மிரட்டியிருப்பதில் ஜெயித்திருக்கிறது "மோ".
ஆக மொத்தமாத்தத்தில்., "மோ படத்திற்கு போலாம் வா ... என யாரையும், யாரும் தாராளமாய அழைத்து போகலாம்!"