அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

அட்டகத்தி உள்ளிட்ட சில படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து கவனத்திற்கு வந்தார். பின்னர் விக்ரம், விஜய் சேதுபதி , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு ரவுண்டு வந்த அவருக்கு தற்போது தமிழில் மார்க்கெட் டல் அடித்து வருகிறது.
இதன் காரணமாக தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த சங்கராந்திக்கு வஸ்துணம் என்ற படம் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வந்து 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இதனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் வெற்றி பட நடிகை என்ற பட்டியலில் சேர்ந்து இருக்கிறார்.
மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது தாய்மொழி தெலுங்கு என்பதால் புதிய தெலுங்கு படங்களில் அவரை நடிக்க வைக்க அங்குள்ள இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் தற்போது அவர் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார்.