இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இயக்குனர் கவுதம் மேனன் மலையாளத்தில் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இப்படம் தொடர்பாக பல்வேறு சேனல்களுக்கு இவர் பேட்டி அளித்து வருகிறார். அப்போது அவரிடம் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கவுதம் மேனன் கூறியதாவது, "டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் என் படங்களின் சில காட்சிகளை கலாய்த்து என்னை நடிக்க வைத்துள்ளார் சந்தானம். கால்ஷீட் இல்லாத சமயத்திலும் நீங்கள் கேட்டதற்காக நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்து தந்தேன். இப்போது எனக்காக டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்து தர வேண்டும் என்றார். அவருக்காக மட்டுமே நடித்தேன். ஆனால், அந்த படத்தில் நடித்ததை மிகவும் ரசித்தேன். மக்களும் திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறேன் " என்றார்.