Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சற்றுமுன் கிடைத்த தகவல்

சற்றுமுன் கிடைத்த தகவல்,
  • சற்றுமுன் கிடைத்த தகவல்
  • கனல் கண்ணன்
  • அம்மு பாரதி
  • இயக்குனர்: புவன கண்ணன்
07 பிப், 2009 - 00:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சற்றுமுன் கிடைத்த தகவல்

தினமலர் விமர்சனம்


வக்கிர புத்தி ஆண்களால் அடுத்தடுத்து அதிர்ச்சிக்குள்ளாகி மனநிலை பாதிப்பிற்குள்ளாகும் அனாதை சிறுமி வளர்ந்து பெரியவள் ஆனதும் தன்னை தவாறன எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களை பழி தீர்ப்பதே சற்றுமுன் கிடைத்த தகவல் படத்தின் மொத்த கதையும்! ஆனால் அதை சுற்றி வளைத்து, எப்படி எப்படியெல்லாம் குழப்பி அடிக்க முடியுமோ... அப்படி அப்படியெல்லாம் குழப்பி அடித்திருப்பது கொடுமை!


பல நூறு படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் பணிபுரிந்த கனல் கண்ணன் முதல்முதலாக ஹீரோவாக நடித்திருக்கிறார். கனலுக்கு அனல் பறக்கும் வேறு கதையே கிடைக்கவில்லையா? என கேட்கத்தூண்டும் படியாக சற்றுமுன் கிடைத்த தகவல் படம் முழுசும் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் தவிர பிற காட்சிகளில் அவரது நடிப்பும் அவ்வாறே இருப்பது மேலும் வேதனை.


படத்தில் கதாநாயகி மீராவாக வலம் வரும் பாரதிக்கு மட்டும்தான் மனநிலை பாதிப்பா? அல்லது அவரது மனோதத்துவ டாக்டராக வரும் குஷ்பு, ஹீரோ கனல் கண்ணன், போலீஸ் அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் தரும் அரசு டாக்டர் என சின்னச் சின்ன கேரக்டர்கள் வரை எல்லாருக்கும் அதே பாதிப்பா என கேட்கும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது படத்தை பார்ப்பவர்களுக்கும் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


இப்படி ஏகப்பட்ட கொடுமைகளுக்கு இடையே கனலில் மாமா மகள் தேனாக வந்து, பின் பிரபல நடிகையாகும் புதுமுகம் மீனாட்சி (கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சி அல்ல)யின் கிளாமர் ஒரே ஆறுதல். அதேசமயம் மனநிலை பாதிக்கப்பட்ட பாரதியின் கவர்ச்சியும், ஒத்தப்பாட்டுக்கு குத்து டான்ஸ் போடும் பாபிலோனாவின் கவர்ச்சியும் ரொம்ப சூடு!


கனல் கண்ணனால் கொலை செய்யப்பட்டதாக காட்டப்படும் அவரது மாமா மகளை அவர் கொல்லவில்லை என்று கூறிவிட்டு பின் அவரை யார் கொன்றது? என்பதை கடைசிவரை சொல்லாமல் விட்டது யார் செய்த தவறோ தெரியவில்லை. பாலாவின் இசை, ஏ.எல்.நாராயண் ராமனின் ஒளிப்பதிவு, புவனை கண்ணனின் இயக்கம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது டான் மேக்ஸின் படத்தொகுப்பு. ஆம்! மற்றவற்றைக் காட்டிலும் எடிட்டில் ரொம்பவே மோசம்!

பின்குறிப்பு : கனல் கண்ணனின் நடிப்பு, குஷ்பு, பாரதி, கே.எஸ்.ரவிக்குமார், மீனாட்சி உள்ளிட்டவர்களின் நடிப்பு பற்றியெல்லாம் விமர்சனத்தில் ஒரு வரி கூட சொல்லவில்லையே? அட... அதெல்லாம் சொல்ற மாதிரியே இல்லைங்கிறத சொல்லியே ஆகணுமா?!

சற்று முன் கிடைத்த தகவல்... சாரி.., சரியில்லாத தகவல்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in