தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு காரைக்குடி, தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டை காட்சியை கனல் கண்ணன் இயக்கி வருகிறார். இதனை விஷால் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு, ‛‛மூன்று சண்டை காட்சிகள் திலீப் சுப்பராயன் இயக்கத்தில் முடித்த பிறகு எனது விருப்பமான கனல் கண்ணன் மாஸ்டர் உடன் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது,'' என போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.