Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

கடவுள் இருக்கான் குமாரு

கடவுள் இருக்கான் குமாரு,Kadavul Irukkan Kumaru
ஜிவிபிரகாஷை வைத்து ராஜேஷ்.எம் இயக்கும் படம் இது.
19 நவ, 2016 - 10:42 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » கடவுள் இருக்கான் குமாரு

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், ஓ.கே ஓகே" படங்களின் இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் காமெடி கலாட்டா படம் தான் "KIK" எனும் "கடவுள் இருக்கான் குமாரு" திரைப்படம்!

குமார் எனும் ஜி.வி.பிரகாஷூக்கு ப்ரியா எனும் நிக்கி கல் ராணியுடன் நிச்சயதார்த்தமெல்லாம் முடிந்து, இரண்டு நாளில் கல்யாணம். அந்த அலப்பறையில் பாண்டிச்சேரிக்கு பேச்சுலர் பார்ட்டிக்கு போனாதான், நான்சி எனும் "கயல்" ஆனந்தியுடனான தன், பழைய காதலை மறக்க முடியும்... என நிக்கியின் காரிலேயே நண்பர் பாலாஜியுடன் பாண்டிக்கு கிளம்பும் ஜி.வி.யின் கார் பார்ட்டி முடிந்து திரும்பும்போது எதிர்பாராமல் போலீஸிடம் சிக்குகிறது. அதன்பின் விபத்தில் சிக்குகிறது. அதற்குப்பின், ஜி.வியும், பாலாஜியும் பேய் பங்களாவில் சிக்குகின்றனர். அவை எல்லாவற்றிலுமிருந்து ஜி.வி மீண்டாரா? தன் பழைய காதலியுடன் சேர்ந்தாரா.? அல்லது பழைய காதலை துறந்து நிக்கியுடன் கல்யாணம் காட்சி என்று ஐக்கிய மானாரா..? பழைய காதலி நான்சி எனும் ஆனந்திக்கும், ஜி.விக்கும் என்ன பிரச்சினை.? எனும் வினாக்களுக்கு விடையளிக்கும் கதையுடன் காமெடி, காமநெடி, டபுள் மீனிங், ட்ரிபிள் மீனிங்... எல்லாம் கலந்து ஜி.வி.பிரகாஷுக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்தி அதில் ஒரளவு வெற்றியும் பெற முயற்சித்திருக்கின்றனர்.

தான் படித்த கார்ப்பரேஷன், சிபிஎஸ்சி ஸ்கூலுக்கு விளக்கம் தருவதில் தொடங்கி காருக்காக, பிளயிங் கிஸ் கொடுத்து பேச்சுலர் பார்ட்டிக்கு, பாண்டிசேரிக்கு காரைக்கிளப்பிப் போய் ஒசி குடி, குடித்துவிட்டு வானத்தை பார்த்து படுத்தபடி, பாலாஜியிடம் "மச்சி, இந்த ஸ்டார்ஸையெல்லாம் பார்க்கும் போது உனக்கு என்ன தோனுது எனக் கேட்டு, எனக்கு ஸ்டார் தியேட்டர்ல ஷகிலா படம் பார்த்த ஞாபகமா வருது..." என்பது வரை ஜி.வி நடிக்கவில்லை அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லத்தான் ஆசை! தொடர்ந்து ஒரே மாதிரியாக நடிப்பதும், தொடர்ந்து டபுள் மீனிங் வசனம் உள்ள படங்களாக நடிப்பதும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களை முகம் சுழிக்க வைப்பது மாதிரி நடந்து கொள்வதும் ஜிவி பிரகாஷ்க்கு நல்லதல்ல, அழகல்ல.

நான்சியாக , நாயகியாக ஜி.வியின் காதலியாக கயல் ஆனந்தி, நன்றாகவே நடித்திருக்கிறார். ஜி.வி. எதிர்பார்ப்பை உணர்ந்து அவர் எதிர்பாராத நேரத்தில் கிஸ் அடிக்கும் சீன் ஒன்று போதும் அம்மணியின் நடிப்பிற்கு கட்டியம் கூற!

ப்ரியாவாக வரும் நிக்கி கல்ராணி, கல்யாண பெண்ணாக கலக்கி இருக்கிறார். சின்னப் பையன் ஜி.விக்கு சில சீன்களில் அக்கா மாதிரி தெரிந்தாலும் பக்காவாக, செம கிக்காக ஜொலித்திருக்கிறார் அம்மணி. இது தான் உன் லாஸ்ட் பார்ட்டி உன் சோடா புட்டி நண்பன் கூட இனி சேர வேகூடாது என கண்டீஷன் போடுவது வரை பிச்சி பெடலெடுத்திருக்கிறார்

பாலாஜியாகவே வரும் ரேடியோ ஆர்.ஜே.பாலாஜி, ஹெவிடூட்டி லைசென்ஸே இருக்கு... லாரியே ஓட்டுவேன்... என்பதில் தொடங்கி டபுள், டிரிபிள் மீனிங் வசனங்களில் ரசிகனை எம்.ராஜேஷ் படத்து சந்தானத்திற்கு நிகராக வறுத்தெடுக்கிறார்.

லஞ்ச லாவண்ய போலீஸ் ஆபிசராக மணிமாறனாக வரும் பிரகாஷ்ராஜ், கயல் ஆனந்தியின் அப்பாவாக மைக்கேல் ஆசிர்வாதமாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், பிரகாஷ்ராஜின் அடிப்பொடி எஸ்.ஐ. மாடசாமியாக வரும் ரோபோ சங்கர், ஏட்டு மயில்சாமியாக வரும் சிங்கம் புலி, பாதர் பிரான்சிஸாக வரும் மொட்ட ராஜேந்திரன், ஜி.வியின் அப்பா சிவசுப்ரமணியாக வரும் இப்படத் தயாரிப்பாளர் தயாரிப்பாளர் டி.சிவா, டி.வி. பிரபலமாக காதல் பஞ்சாயத்து பண்ணும் நடிகை ஊர்வசி, பேயாக கோவை சரளா, சந்தானபாரதி, சண்முகசுந்தரம், ஹர்ஷா... உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.

தினேஷின் நடன அமைப்பு டபுள் ஓ.கே. விவேக் ஹர்சனின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு என சொல்லத்தான் ஆசை! சக்தி சரவணனின் ஒளிப்பதிவு ஒவியப்பதி வென்பது ஆறுதல்!

ஜி.வி பிரகாஷ் குமாரின் இசையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின், வரிகளில் "லொக்காலிட்டி பாய்ஸ்...", "நீ போன தெருவுல...", "கம் ஷாரே....", "ஹாய் பாத்து போடி...", "இரவினில் ஆட்டம்...." உள்ளிட்ட பாடல்கள் பரவசம் என்றாலும் இழுவையான காட்சிகளுக்கு பின்னணி இசை, இழுவை ராகம் என்பது எரிச்சல்!

"உன் பைபிள் எங்கன்னு பாதர் கேட்டா என்ன சொல்வ? பையிண்டிங் பண்ண கொடுத்திருக்கேன்னு சொல்லிடுறேன்...." எனும் டயலாக்கில் தொடங்கி, "சரவணா ஸ்டோர்ஸ் ஆட்ல இனிமே அந்த ஓனர் மட்டும்தான்யா நடிப்பாரு... " எனும் டைமிங் பன்ச் வரை இயக்குனர் எம்.ராஜேஷின் நக்கல், நையாண்டி முத்திரை பக்காவாக பளிச்சிடுகிறது. ஆனாலும் ஆங்காங்கே டயலாக்குகளில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அனிருத், சிம்பு... உள்ளிட்ட சக நட்சத்திரங்கள் எல்லோரையும் வம்புக்கு இழுப்பது சற்றே ஒவராகத் தெரிகிறது. (இயக்குனர் எம் .ராஜேஷூக்கு என்னாச்சு .?!) அதே மாதிரி, க்ளைமாக்ஸ் திடீர் பேய் விஜயம் உள்ளிட்ட எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியாகபடுவது பலவீனம்.

மொத்தத்தில், "கடவுள் இருக்கான் குமாரு... படத்துக்குப் போகும் ரசிகனுக்கும் பக்கபலமாக, கடவுள் இருந்தா உஷாரு!"



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in