பாஸ் - Pause (switzerland - 2014 Movie - 13th ClFF சிறப்பு திரைவிமர்சனம்)
நடிகர்கள் - பேப்திஸ்தே கிலிரான், ஜூலியா பவுரி
இயக்குநர் - மேத்யூ அர்பர்
கிடார் இசைக் கலைஞன் ஒருவனின் தனிப்பட்ட வாழ்வை சித்தரிக்கும் படியாக 2014ம் ஆண்டில் சுவிஸர்லாந்தில் மேத்யூ அர்பர் எனும் இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த 82 நிமிடப் படம் தான் பாஸ் (அதாகப்பட்டது, 1 மணி நேரம் 22 நிமிடப் படம் ).
கதைப்படி, கிடார் இசைக் கலைஞரான ஹீரோ, பார்ப்பதற்கு , ஹாலிவுட் ஹீரோ ஜானிதப் மாதிரியே இருக்கிறார். லிவிங் டூ கெதர்... லைப் ஸ்டைலில் தன் காதலியுடன் ஒரே வீட்டில் வாழும் அவருக்கு அவரது காதலியின் சராசரி ஆசாபாசங்களை நிறைவேற்ற முடியா சூழல். அதனால், ஒரு இசைக் கலைஞனாக போராடும் அவரிடமிருந்து பிரிந்து செல்லும் காதலி, அதில் குழப்பமாகும் ஹீரோ... இருவரும், மீண்டும் வாழ்க்கையை புரிந்து கொண்டு இணைத்தனரா?, இல்லையா.? என்பது தான் பாஸ் (Pause) படத்தின் க்ளைமாக்ஸ்.
ஜானி டெப் சாயலில் இருக்கும் ஹீரோ., அவர் ஸ்டைலிலேயே கலக்கி இருக்கிறார். நாயகியும் டபுள் ஒ.கே. கேமிரா, மியூசிக் .. உள்ளிட்டவைகளும் பிரமாதம்.
மேத்யூ அர்பரின் இயக்கத்தில் உணர்ச்சிகரமான படமே பாஸ் (Pause).