Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

டர்ட்டி பாலிட்டிக்ஸ் (ஹிந்தி)

டர்ட்டி பாலிட்டிக்ஸ் (ஹிந்தி),Dirty Politics (Hindi)
  • டர்ட்டி பாலிட்டிக்ஸ் (ஹிந்தி)
  • ஓம் புரி
  • மல்லிகா ஷெராவத்
  • இயக்குனர்: கே.சி.பொக்காடியா
07 மார், 2015 - 15:22 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » டர்ட்டி பாலிட்டிக்ஸ் (ஹிந்தி)

சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட பன்வா தேவியின் கதையை, சிறிய கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் தான் டர்ட்டி பாலிடிக்ஸ். கே.சி.பொகாடியா இயக்கத்தில், மல்லிகா ஷெரவாத் நடிப்பில் வௌியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்று இனி பார்ப்போம்...


அனோகி தேவி எனும் மல்லிகா ஷெராவத் படிப்பறிவு இல்லாத ஒரு நடனக்காரர். அவருக்கு அரசியலில் சேர்ந்து பெரிய ஆளாக வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு மூலதனமாக தனது உடம்பை வைத்து அரசியல்வாதிகளை மயக்கி, ஓவர்நைட்டில் புகழ்பெறுகிறார். அதன்பின்னர் அவர் எப்படி அரசியலில் நுழைந்து, என்ன செய்கிறார் என்பது தான் டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மொத்த கதையும். இதை கொஞ்சம் சுவாரஸ்யமாகவும், கிளுகிளுப்பாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


மல்லிகா ஷெரவாத், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார், ஆனாலும் நடிப்பு கொஞ்சம் கம்மி தான். அதேசமயம் கவர்ச்சியில் அவர் எப்போதும் போல வெளுத்து வாங்கியிருக்கிறார். அரசியல் வாதியாக வரும் ஓம் புரி, நஸ்ரூதின் ஷா, அஸ்தோஷ் ராணா மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டவர்களும் தங்களது பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கின்றனர்.


தேரி மெகிபையான், ஆஜ் கா அர்ஜூன்... உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் கே.சி.பொகாடியா இம்முறை அதை தவறவிட்டுள்ளார். பழைய கதை, பின்னணி இசை, பாடல்கள் உள்ளிட்ட எல்லாமே அந்தக்காலத்து படங்கள் போன்றே உள்ளது. இன்னும் 1980-களை போலவே இப்படத்தையும் இயக்கியுள்ளார் இயக்குநர். அருமையான கதை இருந்தும், அதை சரியாக கொண்டு செல்ல வலுவான திரைக்கதை இல்லாததால், டர்ட்டி பாலிடிக்ஸ், டர்ட்டி மூவியாகவே தெரிகிறது.


இப்படத்தை பார்க்கலாம் என ஒரு காரணம் கூட சொல்லமுடியவில்லை, அதனால் யாரும் இப்படத்தை பார்க்க வேண்டாம் என்றே சொல்ல தோன்றுகிறது.


மொத்தத்தில், டர்ட்டி பாலிடிக்ஸில் - எந்த டர்ட்டி பாலிடிக்ஸூம் இல்லை, இயக்குநரால் டர்ட்டி கேம் ஆக்கப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in