என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

ஹிந்தியில் பல படங்களில் நடித்தவர் மல்லிகா ஷெராவத். தமிழில் கமல்ஹாசன் நடித்த 'தசாவதாரம்' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்தில் 'கலாசலா கலசலா…' பாடலுக்கு நடனமாடியவர். ஜாக்கிசானுடன் 'தி மித்' என்ற சீனப்படத்திலும் நடித்துள்ளார். 
தன்னுடைய சமூகவலைதளத்தில் அவ்வப்போது பல புகைப்படங்களைப் பதிவிடும் வழக்கம் உடையவர் மல்லிகா. சில சமயங்களில் பிகினி புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் கோவாவில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகச் சென்றவர் ஒரு பிகினி புகைப்படத்தையும், நீச்சல் குளத்தில் பிகினியுடன் இருக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.
45 வயதிலும் பிகினியில் புகைப்படத்தைப் பகிரும் மல்லிகாவின் தைரியத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
 
           
             
           
             
           
             
           
            