மர்மர்,Murmur
Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : எஸ்.பி.கே பிக்சர்ஸ் மற்றும் அலோன் பிக்சர்ஸ
இயக்கம் : ஹேம்நாத் நாராயணன்
நடிகர்கள் : ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ்.
வெளியான தேதி : 07.03.2025
நேரம் : 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதைக்களம்
திருவண்ணாமலை அருகே உள்ள ஜவ்வாது மலைப் பகுதியை ஒட்டி உள்ள காட்டில் கன்னி தெய்வங்களுக்கு வருட வருடம் செய்ய வேண்டிய பூஜையை செய்ய விடாது, அங்கிருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும், அதோடு அந்த காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வந்ததில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இதை தெரிந்துக் கொண்ட ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் ஆகிய நான்கு பேரும் ஒரு டாக்குமென்ட்ரி படம் எடுப்பதற்காக அந்த காட்டுக்குள் செல்ல நினைக்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்ட அந்த கிராமத்தை சேர்ந்த யுவிகா ராஜேந்திரன் என்ற இளம் பெண் ஒருவரும் இணைந்து கொள்ள ஐந்து பேரும் அந்த காட்டுக்குள் செல்கிறார்கள். இறுதியில் அந்த காட்டுக்குள் சென்ற ஐந்து பேரும் உயிருடன் திரும்பினார்களா? உண்மையில் சூனியக்காரி ஆவி இருக்கிறதா? சப்த கன்னிகள் இருக்கிறார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என ஐந்து பேரை சுற்றியே படம் நகர்கிறது. இவர்களும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். காட்டுக்குள் பயப்படும் காட்சியில் பயமில்லாது போல் பேசிவிட்டு, பின்பு பேயைப் பார்த்து அலறும் காட்சிகளில் பயமுறுத்தி இருக்கிறார்கள்.

ஒரு மலை கிராமத்தில் இருக்கும் கன்னி தெய்வங்களும் அதை தடுக்கும் சூனியக்காரி என சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படத்தை இயக்குனர் ஹேம்நாத் நாராயணன் இயக்கியிருக்கிறார். வழக்கமான பேய் படம் போல் இல்லாமல், இதில் ‛பவுண்ட் பூட்டேஜ்' என்று சொல்லக்கூடிய நேரடியாக கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. சுமார் 7:30 மணி நேரம் எடுத்த படத்தை எடிட் செய்து 2.15 மணி நேரமாக ரசிகர்களுக்கு காட்டி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு கேமரா மூலம் பார்ப்பது போல் காட்சிகளை உணர வைத்து இருக்கிறார். இந்த படத்தில் இசை இல்லாததால் கேவ்ய்ன் பிரெடெரிக் ஒலி வடிவமைப்பு மூலம் நம்மை பயப்பட வைத்து இருக்கிறார்.

பிளஸ் & மைனஸ்

அடர்ந்த காட்டுக்குள் ஐந்து பேரை வைத்துக் கொண்டு முழு படத்தையும் சுவாரசியமாக கொடுக்க இயக்குனர் முயற்சி படம் பார்ப்பவர்களுக்கு பயத்தை காட்ட ஓரளவுக்கு முயன்றிருக்கிறார். இருப்பினும் படத்தில் நீளம் ரசிகர்களை சோர்வடைய செய்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக திரைக்கதையை அமைத்து இருந்தால் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

மர்மர் - நடுநிசி பயம்

 

பட குழுவினர்

மர்மர்

  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓