'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
படம் : ஆனந்தம்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா
இயக்கம் : லிங்குசாமி
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்
'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...' என, குடும்பத்தோடு பாட்டு பாடிய, வானத்தைப்போல படத்திற்கு பின், ஆர்.பி.சவுத்திரி அதே போல, ஆனந்தம் படத்தையும் தயாரித்தார். விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்த லிங்குசாமி, இப்படத்தின் மூலம், இயக்குனராக உயர்ந்தார்.
சகோதர பாசத்தை அள்ளித் தெளித்த, வானத்தைப்போல படத்திலும், இவர் பணிபுரிந்தார். அப்படத்திலும், நான்கு சகோதரர்கள்; இதிலும் அப்படியே. மூத்த சகோதரர் தியாகி; இதிலும் அப்படியே. மற்றபடி இரு படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. 'என்னங்க, இப்படத்துல எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க...' என, பலரும் கருத்து தெரிவித்தனராம். ஆனாலும், கதையை மாற்றும் திட்டமில்லை என, திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார், லிங்குசாமி.
மூத்த அண்ணனாக மம்முட்டி, அசத்தியிருந்தார். 'டப்பிங்' மட்டும், மனிதர் ரொம்ப கஷ்டப்பட்டாராம். பாசமான தம்பியாக நடித்தோரில், முரளி கண்கலங்க வைத்தார். இப்படத்திற்கான கதையை, தன் சொந்த வாழ்வில் எடுத்து பயன்படுத்தியிருந்தார். படத்திற்கு, 'திருப்பதி பிரதர்ஸ்' என, பெயரிட விரும்பினார். படத்திலும், மளிகை கடையின் பெயர், அது தான். அந்த பெயர் ஏற்கப்படாததால், தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு, திருப்பதி பிரதர்ஸ் என, பெயர் சூட்டினார். அதன்பின் படத்திற்கு, 'தாமிரபரணி' என, பெயர் சூட்டப்பட்டு, இறுதியில், ஆனந்தம் ஆக மாறியது.
முரளியின் ஜோடியாக தேவயானி நடிக்கவிருந்தார். மம்முட்டி ஜோடியாக நடிக்க வேண்டிய சவுந்தர்யா விலகியதால், தேவயானி, அவருக்கு ஜோடியாக மாறினார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தன.
தமிழகம் எங்கும் பெருக்கெடுத்தது, ஆனந்தம்!