மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நடிகை மனிஷா கொய்ரலாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடைபெற்றது. பாலிவுட் பிரபல நடிகை மனிஷா கொய்ரலா கடந்த மாதம் 28ம்தேதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்களின் பரிசோதனையில், மனிஷா கொய்ரலா புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
ஆனால் இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே டாக்டர்களின் அறிவுரையின்படி நடிகை மனிஷா கொய்ரலா அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அதனைத்தொடர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மனிஷாவுக்கு புற்றுநோய் ஆபரேஷன் நடைபெற்றது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடைபெற்றதாக மனிஷா கொய்ரலாவின் மேலாளர் சுப்ரதோ கோஷ் தகவல் வெளியிட்டார். அவர் கூறுகையில், மனிஷா கொய்ரலா குடும்பத்தினரிடம் இருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில் மனிஷா கொய்ரலாவுக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்ததாக கூறியுள்ளனர். மனிஷாவின் தந்தை, தாயார், சகோதரர் ஆகியோர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர், என்றார்.