ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஆபாசப் படங்கள் தயாரித்து அதனை ஆன்லைனில், வெளியிட்டு கோடிக் கணக்கில் சம்பாதித்தாக, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு உதவி செய்த நடிகர், நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் பட்டியலை தயார் செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ராஜ் குந்த்ராவால் ஆபாச படம் எடுக்கப்பட்ட நடிகைகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் அவருக்கு உதவி செய்த நடிகைகளிடம் விசாரணை நடந்து வருகிறது. கஜேந்திரா, திண்டுக்கல் சாரதி, குஸ்தி படங்களில் நடித்துள்ள புளோரா மற்றும் ஜெலினா ஜெட்லி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜ்குந்த்ரா பற்றி இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா ஆபாச பட விவகாரத்துக்கு முன்பே பரபரப்பு பாலியல் புகார் கூறியிருந்தார். அவருடன் பணியாற்றிய போது அவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக குற்றம் சாட்டியிருந்தார். அந்த குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் இந்த புகாரின் அடிப்படையில் ஷெர்லின் சோப்ராவுக்கு ராஜ் குந்த்ராவுடன் தொடர்பு இருப்பது உறுதியானது. இதனால் அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
தன் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தினாலும் ஆபாச பட வழக்கில் தன்னை கைது செய்ய வாய்ப்பிருப்பதை அறிந்த ஷெர்லின் சோப்ரா மும்பை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஷெர்லின் சோப்ரா போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வழக்கை சந்திக்க வேண்டும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.