அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள, ‛ஜகமே தந்திரம்' படம் நெட்பிளிக்ஸில் இம்மாதம் 18-ந்தேதி வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம் ஆங்கில சப்-டைட்டில் உடன் வெளியாகிறது. இந்த நிலையில், அதே ஜூன் 18ல் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்துள்ள ஷெர்னி என்ற படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுகிறார்கள். இப்படத்தை பல சர்வதேச விருதுகளை பெற்ற நியூட்டன் படத்தை இயக்கிய அமித் மசூர்கர் இயக்கியிருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டிருப்பதோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 18-ந்தேதி அன்று வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம், வித்யாபாலனின் ஷெர்னி என்ற இரண்டு படங்களுக்குமிடையே ஓடிடி தளத்தில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.