'ஜெயிலர், லியோ' வசூல் சாதனை முறியடிக்கப்படுமா? | ஜுனியர் என்டிஆரின் 10 வருட தொடர் வெற்றியைப் பறித்த 'வார் 2' | கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை | ‛தண்டகாரண்யம்' தலைப்புக்கு அர்த்தம் தெரியுமா? | அடுத்து வர இருக்கும் படங்களில் ‛மதராஸி' மட்டுமே டாப் | மீண்டும் இணைந்து நடிக்கப் போகும் ரஜினி, கமல்? | நான்கு நாளில் ரூ.404 கோடி வசூலைக் கடந்த கூலி | பிளாஷ்பேக்: வித்தியாசமான சிந்தனையோடு 'வீணை' எஸ் பாலசந்தர் தந்த விளையாட்டு “பொம்மை” | இன்ஸ்டாவில் பின்தொடரும் ஏ.ஆர்.ரஹ்மான் ; மகிழ்ச்சியில் மஞ்சும்மேல் பாய்ஸ் இசையமைப்பாளர் | 25 நாட்களைக் கடந்த 'தலைவன் தலைவி' |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் டைகர் ஷெராப், திஷா பதானி. இருவரும் காதலர்கள் என்கிறது பாலிவுட் வட்டாரம். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜுன் 15ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம். 2 மணிக்கு மேல் எந்தக் காரணமும் இல்லாமல் வெளியில் வரக் கூடாது.
ஆனால், காதல் ஜோடிகளான டைகர், திஷா இருவரும் மும்பையில் 2 மணிக்கு மேல் ஊர் சுற்றியிருக்கிறார்கள். போலீசார் அவர்களிடம் விசாரித்த போது சரியான காரணத்தைக் கூறவில்லையாம். அதனால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து எப்ஐஆர் போட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பு விவேகம் படத்தில் வில்லனாக நடித்த ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் மாஸ்க் போடாமல் வெளியில் வந்த போது அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.