அறிமுக இயக்குனருடன் இணைந்த விக்ரம் பிரபு! | ‛கேம் சேஞ்ஜர்' படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவு! | 2000 கோடியை தொடுமா புஷ்பா- 2 ? | ஹிந்தியில் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூலித்த ‛கேம் சேஞ்ஜர்' | அஜித்தின் ‛விடாமுயற்சி'யால் விக்ரமின் ‛வீர தீர சூரன்' பின்வாங்குகிறதா? | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் பொன்னியின் செல்வன் நடிகை! | காதலிக்க நேரமில்லை - ஜெயம் ரவிக்கு 'கம் பேக்' ஆக அமையுமா? | 'கேம் சேஞ்ஜர்' படத்திற்குப் போட்டியாக 'டாகு மகாராஜ், சங்கராந்திகி வஸ்தனம்' | உங்கள் அன்பை சாகும்வரை மறக்க மாட்டேன் - விஷால்! | இந்தியாவில் ரீ ரிலீஸ் ஆகும் இன்டர்ஸ்டெல்லார்! |
பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணவத். ஒரு பக்கம் நடிப்பில் தேசிய விருதுகளை அள்ளிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் துணிச்சலான கருத்துக்களை வெளியிட்டு இரும்பு பெண்மணியாக பொது வெளிகளில் பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் குற்றவாளிகளை மகாராஷ்டிர அரசு பாதுகாப்பதாக துணிச்சலாக கூறி அந்த மாநில அரசையே எதிர்த்து நின்றார். மும்பைக்குள் நுழைய விட மாட்டோம் என்கிற சிவசேனாவின் மிரட்டலுக்கு பணியாமல் மும்பைக்குள் நுழைந்தார். விவசாயிகள் போராட்டத்தை எதிர்த்தார்.
துணிச்சல் மிக்க கங்கனா ரணவத்தை அரசியலுக்கு கொண்டு வர பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர முன்வந்தபோதும் அதனை ஏற்க மறுத்து விட்டார். அரசியலுக்கு வரமாட்டேன், அப்படி வந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டே வருவேன் என்றார்.
இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த கங்கனாவை அந்த மாநிலத்தின் வழியாகவே அரசியலுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே அவரது பொற்கோவில் வழிபாடு திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதி பார்லிமென்ட் உறுப்பினர் சுவரூப் சர்மா சமீபத்தில் இறந்து விட்டார். காலியாக உள்ள இந்த தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தொகுதியில் கங்கனாவை நிறுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டிருப்பதாகவும், இந்த தொகுதியில் சீக்கிய மக்களின் ஓட்டு கணிசமாக இருப்பதால் அவர்களின் மனதில் இடம்பிடிக்கவே கங்கனா பொற்கோவிலுக்கு சென்றதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.